ஹரே கிருஷ்ணா
உன் கையின் குழலாக
உலகறிய வேண்டும் நான்
உள்ளே வெற்றிடமாய்...
இருந்தும் நிறைகுடமாய்!
ஓட்டைகளை சில இருந்தாலும்
மறைக்கின்ற தேவையின்றி...
ஸ்திரமாய்... பத்திரமாய்...
நிம்மதியாய்... அமைதியாய்...
என்னிலிருந்து வரும்
ஒலியெல்லாம் இசையாக....
அந்த இசையெல்லாம் உனதாக...
உன் தெய்வீக இதழ்கள்...
என் மேல் பதியட்டும்...
ஆனந்த இசை வெள்ளம்
அளவற்று பரவட்டும்...!
ரோம ரோமமு ராம நாமமே!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்

என் கீதாச்சார்யார்
நன்றியுரை
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Thursday, September 18, 2008
கண்ணன் கையின் குழலாக
Posted by ramesh sadasivam at 8:03 PM 4 comments
Labels: devotional poems, flute, flute krishna, tamil
Monday, July 21, 2008
ஸ்ரீ ராமர் மென் பாதம்
ஸ்ரீ ராமர் மென் பாதம் பூ போட்டு பூஜித்தேன்
ஸ்ரீ ராமர் வன் தேகம் பொன் போட்டு அர்ச்சித்தேன்
ஸ்ரீ ராமர் இன் நாமம் எப்போதும் யோசித்தேன்
ஸ்ரீ ராமர் நன் காதை நாள் தோறும் வாசித்தேன்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ராமா ராமா ரகு ராமா
அகிலம் போற்றும் பரந்தாமா
ராமா ராமா ரவி ராமா
நான் மறை ஏற்றும் பல நாமா
அன்னையர் ஏங்கும் சிசு ராமா
கோசலை போல் உணவூட்டுகிறேன்
தசரதன் வம்சத்து இசை ராமா
நீ மகிழ வேடிக்கை காட்டுகிறேன்
எளியவர் நண்பா குக ராமா
உனை இதயப் படகில் ஏற்றுகிறேன்
அனுமன் இதயத்தின் குண ராமா
மனதால் மாலைகள் சூட்டுகிறேன்
ராமா ராமா ரகு ராமா
ஜானகி தேவியின் மண ராமா
ராமா ராமா ரவி ராமா
கோதண்டம் ஏந்தும் பல ராமா
அன்பால் ஆளும் வல்லவனே
உனை உயிராய் நானும் எண்ணுகிறேன்
ஞானியர் போற்றும் நல்லவனே
அன்பால் அர்ச்சனை பண்ணுகிறேன்
குற்றம் இல்லா தூயவனே
உனை இன்றே கண்டிட ஏங்குகிறேன்
இணையே இல்லா இனியவனே
உன் காலடி தலையால் தாங்குகிறேன்
ராமா ராமா ரகு ராமா
சிவனார் ஜபிக்கும் சிவ ராமா
ராமா ராமா ரவி ராமா
யோகியர் பூஜிக்கும் பரமான்மா
கல்லாய் கிடந்த அகலிகையை
நகக் கண்ணால் நீயும் பார்த்தாயே
பாவம் நீங்கிய உத்தமியை
மீண்டும் இல்லறம் சேர்த்தாயே
ராவணன் கூட சரணடைந்தால்
யோசிக்காமல் ஏற்பாயே
கார்முகில் வண்ண நாயகனே
இணையற்ற அன்பை வார்ப்பாயே
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராமர் மென் பாதம் பூ போட்டு பூஜித்தேன்
ஸ்ரீ ராமர் வன் தேகம் பொன் போட்டு அர்ச்சித்தேன்
ஸ்ரீ ராமர் இன் நாமம் எப்போதும் யோசித்தேன்
ஸ்ரீ ராமர் நன் காதை நாள் தோறும் வாசித்தேன்
Posted by ramesh sadasivam at 11:19 PM 6 comments
Labels: bakthi, bakthi kavithai, shri rama, tamil, tamil poetry
Thursday, June 26, 2008
வீர ராமர்
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
சீதா ராம்
ராஜா ராம் ஜெய ராஜா ராம் ஜெய
ராஜா ராம் ஜெய ராஜா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம் ஜெய
சீதா ராம் ஜெய சீதா ராம்
மனிதருள் சிங்கம் மாசறு தங்கம்
நற்குண கடலின் உறைவிடமே
மனிதனாய் வந்தாய் மானுடம் காத்தாய்
துளியும் தழும்பா நிறைகுடமே
நல்லவை காக்கும் அல்லவை போக்கும்
அகிலம் ஆளும் மன்னவனே
தர்மம் நிலைக்க அசுரரை அழிக்க
ஆயுதம் எடுத்தால் தென்னவனே
கோபம் இல்லாதவன் கொன்று குவிப்பவன்
கோதண்டம் தாங்கும் கொற்றவனே
சிவவில் பிடித்து சில்லென உடைத்த
இரும்பென இருகரம் உற்றவனே
பெண்மையை மதித்து அச்சத்தை விடுத்து
கோர தாடகை கொன்றவனே
வன்மத்தில் கொதித்து வம்சத்தை அழித்த
கோடறி ராமனை வென்றவனே
எதிரிகள் அஞ்சும் நண்பர்கள் கொஞ்சும்
வீரமும் ஈரமும் வாய்த்தவனே
தன் ஆற்றல்கள் கண்டு ஆணவம் கொண்ட
வானர வாலியை சாய்த்தவனே
வருணனை வென்று வானரம் கொண்டு
இலங்கைக்கு பாலம் செய்தவனே
முதல் நாள் விடுத்து மறுநாள் அழைத்து
ராவணன் தலையை கொய்தவனே
உன் காலடி பிடித்து காமத்தை விடுத்து
அஞ்சனை மைந்தன் மகிழ்ந்தாரே
உன் நாமத்தை ஜபித்து ஆசையை ஜெயித்து
தெய்வ நிலையை அடைந்தாரே
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
ராம் ராம் ராம் ஹரே
சீதா ராம்
ராஜா ராம் ஜெய ராஜா ராம் ஜெய
ராஜா ராம் ஜெய ராஜா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம் ஜெய
சீதா ராம் ஜெய சீதா ராம்
Posted by ramesh sadasivam at 7:45 AM 3 comments
Labels: bakthi kavithai, bhajan, bravery, rama, shri rama, tamil, tamil poetry
Tuesday, June 24, 2008
சப்தரிஷி ராமாயாணம்
சப்தரிஷி ராமாயணம் சுருக்கமானது. ஏழு மகரிஷிகளால் இயற்றப் பெற்றதால் சப்தரிஷி ராமாயணம் என பெயர் பெற்றது. சமஸ்கிருத ஸ்லோகங்களாக இயற்ற பெற்ற இதை ஸ்ரீ ராமரின் திருவருளால் தமிழில் கவிதையாக்கியிருக்கிறேன். இதை படிப்பவர் யாவரையும் காத்தருள வேண்டுமென ஸ்ரீ ராமரை வேண்டி அவர் பொற்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்.
காஷ்யப மகரிஷியின் பால காண்டம்
வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார்
விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார்
கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார்
அகலிகா கல்லின் மேல் அவர் பாதம் பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை வகுந்தார்
மண்ணின் மகளாம் சீதையை மணந்தார்
ஜானகி ராமனாய் ஊர்வலம் நடந்தார்
வழியில் பரசுராமருக்கு பணிவை தந்தார்
அயோத்தி திரும்பினார் நலமாக
பல்லாண்டு வாழ்ந்தார் வளமாக
அத்ரி மகரிஷியின் அயோத்யா காண்டம்
ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில்
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில்
அதை கைகேயி புத்திக்குள் திணித்தாள்
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள்
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள்
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால்
உன் ராமன் காடாள வேண்டும்
என் பரதன் நாடாள வேண்டும்
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார்
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார்
பரத்வாஜ மகரிஷியின் ஆரண்ய காண்டம்
தந்தை சொல் காக்க மனம் உகந்தார்
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார்
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார்
வேடன் குகனின் நட்பை அடைந்தார்
மரவுரி சடை முனி போல தரித்தார்
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார்
காண வந்த பரதனை அணைத்தார்
தந்தைக்கான ஈமக்கடன் முடித்தார்
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார்
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார்
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும்
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும்
விஸ்வாமித்திர மகரிஷியின் கிஷ்கிந்தா காண்டம்
அகஸ்தியர் சொல்படி பஞ்சவடி சென்றார்
பஞ்சவடியின் முனிவர்களிடம் அபயம் என்றார்
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார்
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார்
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார்
வானர தலைவன் வாலியை வதம் செய்தார்
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார்
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார்
கௌதம மகரிஷியின் சுந்தர காண்டம்
ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார்
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார்
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார்
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார்
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார்
இலங்கையை நெருப்பால் எரித்தார்
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக பறந்தார்
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார்
ஜமதாக்னி மகரிஷியின் யுத்த காண்டம்
ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார்
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார்
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார்
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார்
இலங்கை அரசை விபீஷணன் தலையில் முடிந்தார்
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார்
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார்
விசிஷ்ட மகரிஷியின் உத்தர காண்டம்
சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார்
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார்
அவர் ஆட்சியில் அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார்
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார்
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார்
தம் புதல்வரான லவ குசரை அவற்றுக்கு அரசனக்கினார்
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார்
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார்
பாராயண பலன்
அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர்
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர்
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர்
தேவர்கள் விஷ்ணுவை துதிக்கும் வைகுண்டம் செல்வர்
Posted by ramesh sadasivam at 10:17 AM 10 comments
Labels: hanuman, pattabhishekam, poem, rama, ramar pugazh, ramayana, rishi, sita, tamil
Monday, June 23, 2008
ஸ்ரீ பால கணேஷர் அன்பு ஆராதனை
ஓம்
சக்தியின் மடியில்
தவழும் கணேஷா...!
சிவனார் அணைப்பில்
மகிழும் கணேஷா...!
முருகரை அணைக்கும்
மூத்த கணேஷா...!
மாயவர் மாப்பிள்ளை
மங்கள கணேஷா...!
உனை அண்ணனாய் நினைக்க
உள்ளம் துணிந்தேன்...!
நீ அதை உடனே ஏற்க
உன்
பாதம் பணிந்தேன்...!
செயலின் வடிவம்
நீ என
உணர்ந்தேன் நானே...!
Son of Energy
Action தானே...!
நீ மனது வைத்தால்
தடைகள் வராது
மனதை வாட்டும்
தடங்கல் தராது
என் நாத ஆராதனைக்கு
உள்ளம் கரைந்தாய்...!
மறுநாள் காலை
என் கனவுக்குள் விரைந்தாய்...!
எளியவன் துதியை
அன்போடு ஏற்றாய்...!
என் கர்ம வினைகள்
பறந்தன காற்றாய்...!
கொழு கொழு தொப்பையை
ஆசையோடு தொடுகிறேன்...!
மொழு மொழு கன்னத்தில்
முத்தங்கள் இடுகிறேன்...!
அண்ணா என்று
அன்போடு அழைக்கிறேன்...!
என் ஆணவத்தை உன் கோவிலின்
பலி பீடத்தில் வைக்கிறேன்...!
செல்வம் வேண்டாம் புகழும் வேண்டாம்
சித்திகள் வேண்டாம் சிறப்புகள் வேண்டாம்
பட்டங்கள் வேண்டாம் பதவிகள் வேண்டாம்
இன்றும் என்றும்
இப்போதும் எப்போதும்
உன் அன்பு ஒன்று
அதுவே போதும்...!
Posted by ramesh sadasivam at 4:33 AM 5 comments
Labels: aaradhana, aaradhnai, action, baala ganesha, bakthi, bakthi kavithai, ganesha, kavithai, love, shiva, tamil, tamil poem, tamil poetry