CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, October 22, 2008

மன்னர் மன்னவன்

அழகின் மனமதன் அறிவில் சூரியன் பண்பில் தூயவன் ராஜாராம்
நன்மை நாயகன் பக்தர்வத்சலன் அன்பில் தாயவன் சீதா ராம்

வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் வானம் என்றும் நனையாது
முடி பெற்றாலும் வனம் சென்றாலும் அவன் முகத்தில் சலனம் தோன்றாது
வெயில் அடித்தாலும் கனல் எரித்தாலும் கடலின் ஆழம் குறையாது
யுகம் சென்றாலும் உலகழிந்தாலும் ராமரின் நற்புகழ் மறையாது

போரில் தென்னவன் வெற்றிக் கொள்பவன் மன்னர் மன்னவன் ராஜா ராம்
அரசில் வல்லவன் வேதம் சொல்பவன் தேவர் காவலன் சீதா ராம்

எவர் சொன்னாலும் என்ன செய்தாலும் ஆறுகள் மலை மேல் ஏறாது
என்ன நேர்ந்தாலும் உயிர் பிரிந்தாலும் அவன் உதடுகள் பொய்மை கூறாது
எவர் அழுதாலும் என்ன தொழுதாலும் சூரியன் இரவில் காயாது
உறவென்றாலும் பகையென்றாலும் அவன் நீதியின் கோள் சாயாது

காரில் நீரவன் கனலில் சூடவன் கண்ணில் ஒளியவன் ராஜா ராம்
மெய்யில் உயிரவன் மெய்யின் உருவவன் மென்மை குணமுள்ள சீதாராம்

எங்கு போனாலும் எங்கும் இருந்தாலும் காற்று எதிலும் ஒட்டாது
உடலெடுத்தாலும் உறவேற்றாலும் ராமரை மாயை கட்டாது
கண்கள் மூடினால் கருமை தோன்றினால் அகிலம் இலையென்றாகாது
ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!

ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே ராஜா ராம்
ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே சீதா ராம்

5 comments:

கவிநயா said...

நல்லாருக்கு பாட்டு.

//எவர் சொன்னாலும் என்ன செய்தாலும் ஆறுகள் மலை மேல் ஏறாது
என்ன நேர்ந்தாலும் உயிர் பிரிந்தாலும் அவன் உதடுகள் பொய்மை கூறாது
எவர் அழுதாலும் என்ன தொழுதாலும் சூரியன் இரவில் காயாது
உறவென்றாலும் பகையென்றாலும் அவன் நீதியின் கோள் சாயாது//

//எங்கு போனாலும் எங்கும் இருந்தாலும் காற்று எதிலும் ஒட்டாது
உடலெடுத்தாலும் உறவேற்றாலும் ராமரை மாயை கட்டாது
கண்கள் மூடினால் கருமை தோன்றினால் அகிலம் இலையென்றாகாது
ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!//

நான் ரசித்த வரிகள் :)

shri ramesh sadasivam said...

நன்றி கவிநயா :)

Niru said...

''ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!''
I am speechless by your poems.Before I wrote comments.But step by step your poems make me speechless & I am thinking a lot.
I thank God for showed me this address by accident.

shri ramesh sadasivam said...

Thanks Niru. I too thank God for giving a reader like you for my blog.

:)

shri ramesh sadasivam said...

:)