ராம் ராம் அய்யா ராம் ராம் அய்யா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அய்யா
தந்தை சொல்லை காத்திடவே வனவாசம் சென்றவர்
வனம் போக செய்தவளும் என் தாயே என்றவர்
வேள்வியதை காத்திடவே வில்லோடு நின்றவர்
வெல்லவொண்ணா வீரர்களை எளிதாக வென்றவர்
ராம் ராம் அம்மா ராம் ராம் அம்மா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அம்மா
வரலாற்றில் முதன்முதலாய் பாலம் ஒன்றை கண்டவர்
இணையில்லா ஒழுக்கத்தால் தனி பெருமை கொண்டவர்
பக்தர்களை வெல்ல வைத்து ஆனந்தம் கொள்பவர்
பக்தர்களின் குற்றமதை தன் குற்றம் என்பவர்
ராம் ராம் அண்ணா ராம் ராம் அண்ணா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அண்ணா
சீதையவள் கால்பிடிக்க சுகமாக துயின்றவர்
லச்சுமணர் சேவை செய்ய ராஜசுகம் பயின்றவர்
அனுமனுக்கு ராமகீதை ரகசியமாய் சொன்னவர்
எளிமையற்ற எவருக்குமே எட்டாத என்னவர்
ராம் ராம் தம்பி ராம் ராம் தம்பி
ராம் ராம் சொல்லு ராம் ராம் தம்பி
சத்தியத்தை எப்பொழுதும் வார்த்தையிலே வைத்திடு
மற்றற்ற கருணையினை உயிர்களிடம் காட்டிடு
ஆடம்பரம் என்பதையே அடியோடு ஒழித்திடு
ராமபக்தியன்றி தேவையில்லை நெஞ்சத்தில் குறித்திடு
ராம் ராம் அய்யா ராம் ராம் அய்யா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அய்யா
ராம் ராம் அம்மா ராம் ராம் அம்மா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அம்மா
ராம் ராம் அண்ணா ராம் ராம் அண்ணா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அண்ணா
ராம் ராம் தம்பி ராம் ராம் தம்பி
ராம் ராம் சொல்லு ராம் ராம் தம்பி
5 comments:
உங்களது பாடலை ஒரு கிராமீய மெட்டில் போட்டு யூ ட்யூபில் இட்டிருக்கிறேன்.
விரைவில் எனது பதிவில் போடுகிறேன். பாடல் நன்றாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீராம் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா வளங்களையும்
பொழிவார்.
சுப்பு ரத்தினம்
http://ceebrospark.blogspot.com
http://www.youtube.com/watch?v=Yh4mbYaVICk
kindly be here.
subbu thatha
அழகான பாடல். அழகான வரிகள்..
//ராமபக்தியன்றி தேவையில்லை நெஞ்சத்தில் குறித்திடு//
ராமபக்திக்கு நிகரான செல்வம் உலகில் எதுவுமில்லை..
ஜெய் ஸ்ரீ ராம்.!
சூப்பு தாத்தா. பாடலுக்கு மிக்க நன்றி.
திலகா, பாடலை ரசித்தமைக்கு நன்றி.
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம்
ராம் ராம் அய்யா ராம் ராம் அய்யா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அய்யா
ராம் ராம் அம்மா ராம் ராம் அம்மா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அம்மா
ராம் ராம் அண்ணா ராம் ராம் அண்ணா
ராம் ராம் சொல்லு ராம் ராம் அண்ணா
ராம் ராம் தம்பி ராம் ராம் தம்பி
ராம் ராம் சொல்லு ராம் ராம் தம்பி
ஸ்ரீராம ஜெயம்
Post a Comment