ட்விட்டர் ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம். வால்மீகி ராமாயணத்தின் ஏழு காண்டங்களை போலவே ஏழு ட்வீட்களை கொண்டது.
ட்வீட் என்பது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்து வடிவம் என்பதும் அது நிறுத்த குறிகள் மற்றும் இடைவெளிகள் சேர்த்து 140 தட்டெழுத்துகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் அன்பர்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
நவீன அவசர வாழ்க்கைக்கான ட்விட்டர் ராமாயணம் பின்வருமாறு
பால ட்வீட்
பாலராம் பெற்றோருக்கு பேரின்பம் தந்தார். விஸ்வாமித்ரருடன் சென்று தாடகையை கொன்று, வேள்வியை காத்து, சிவ வில் முறித்து சீதையை மணந்தார்.
அயோத்யா ட்வீட்
ராம் தன் தந்தை சித்திக்கு செய்திருந்த சத்தியத்தை காப்பாற்ற துறவு ஏற்றார். சீதை-லக்ஷ்மண் உடன் சென்றனர். பரத் ராமின் வருகைக்கு காத்திருந்தார்.
ஆரண்ய ட்வீட்
ராமிடம் வம்பு செய்து சூர்ப்பணகை மூக்கறுபட்டாள். பழி தீர்க்க தன் அண்ணன் ராவணனை சீதை மீது ஏவினாள். ராவணன் சீதையை சூழ்ச்சியால் சிறைபிடித்தான்.
கிஷ்கிந்தா ட்வீட்
ராம லக்ஷ்மணர் சீதையை தேடினர். நல்ல சுக்ரீவரோடு உடன்படிக்கை செய்து தீய வாலியை ராம் கொன்றார். வானர கோ சுக்ரீவர் சீதையை தேட படைகளை ஏவினார்.
சுந்தர ட்வீட்
ராமநாமம் ஜபித்தபடி அனுமார் கடலை கடந்து சீதையை கண்டார். கோபம் கொண்டு இலங்கையை கதி கலக்கி தகனம் செய்து ராமிடம் நற்செய்தியோடு திரும்பினார்.
யுத்த ட்வீட்
ராம் வருணனை வென்று பாலம் செய்ய உத்தரவிட்டார். ராவணனை போரில் கொன்றார். சீதை தீக்குளித்து தன் புனிதத்தை உணர்த்தினாள். ராம் மகுடம் சூடினார்.
உத்தர ட்வீட்
ராம அரசு இணையற்றது. அதன் நன்மை கருதி சீதையை ராம் தியாகம் செய்ய நேர்ந்தது. எனினும் சீதையின் நினைவாகவே இறுதிவரை வாழ்ந்து வைகுண்டம் சென்றார்.
ஸ்ரீ ராம ஜெயம்! இந்த ட்விட்டர் ராமாயணத்தை படிப்பவர் யாவரும் முழு ராமாயணத்தை பாராயணம் செய்த பலனை அடைய வேண்டும். என் ஸ்ரீ ராமரை பிரார்த்திக்கிறேன்.
----------------------------------------------------------------------------------
அன்பர்களுக்கு ஒர் அறிவிப்பு. ராம சரிதத்தை 'என் பிரபுவின் கதை' என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் கவிதையாக இயற்றிவருகிறேன். எனது ஆங்கில தளத்தில் இதுவரை ஆறு பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றை காண இங்கே சொடுக்கவும். தாமதமாக சொன்னதற்காக மன்னிக்கவும்.
5 comments:
தட்டெழுத்து சரியா?
எதேச்சையாக உங்க பதிவுக்கு வந்தேன். நிச்சயம், இது ஒரு நல்ல முயற்சி. அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் நண்பரே. சம்பரதாயமா போல் இருந்தாலும், நிஜமா சொல்றேன். பாராட்டுக்கள்.
நீங்க சொல்லாமலே நான் என் நண்பர்களுக்கு இந்த பதிவை சொல்ல போறேன், உங்க அனுமதியோட.
http://surendharj.blogspot.com
எதேச்சையாக உங்க பதிவுக்கு வந்தேன். நிச்சயம், இது ஒரு நல்ல முயற்சி. அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் நண்பரே. சம்பரதாயமா போல் இருந்தாலும், நிஜமா சொல்றேன். பாராட்டுக்கள்.
நீங்க சொல்லாமலே நான் என் நண்பர்களுக்கு இந்த பதிவை சொல்ல போறேன், உங்க அனுமதியோட.
http://surendharj.blogspot.com
நன்றி சுரேந்தர். :)
நண்பரே, இந்த பதிவை என் பதிவில் சுட்டி இருக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றிங்க.
http://surendharj.blogspot.com/2010/08/blog-post_29.html
Post a Comment