CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 23, 2008

ராம பிரானே ஹரே ராம பிரானே

ராம பிரானே ஹரே ராம பிரானே
ராம பிரானே ஹரே ராம பிரானே
உண்ணும் போதும் உறங்கும் போதும் ராமபிரானே
நான் உங்கள் நாமம் சொல்லிடுவேன் ராமபிரானே
நிற்கும் போதும் நடக்கும் போதும் ராமபிரானே
உங்கள் பொன்னடிகள் நினைத்திடுவேன் ராமபிரானே

ராமபிரானே ஹரே ராமபிரானே
ராமபிரானே ஹரே ராமபிரானே
உங்கள் பக்தனிவன் கோரிக்கையை ராமபிரானே
இப்பொழுதே ஏற்றிடுவீர் ராம பிரானே
உடனடியாய் விரைந்து வந்து ராம பிரானே
என் உள்ளத்தில் குடிபுகுவீர் ராமபிரானே

ராமபிரானே ஹரே ராமபிரானே
ராமபிரானே ஹரே ராமபிரானே
நான் உட்கொள்ளும் உணவையெல்லாம் ராமபிரானே
அர்ப்பணமாய் ஏற்றிடுவீர் ராமபிரானே
குளிர் நீரில் நான் குளிக்கும் போதும் ராமபிரானே
அதை அபிஷேகம் எனக் கொள்வீர் ராமபிரானே

ராமபிரானே ஹரே ராமபிரானே
ராமபிரானே ஹரே ராமபிரானே
அன்பினிலும் பண்பினிலும் ராமபிரானே
உமக்கிணையாக எவரும் உண்டோ ராமபிரானே
கல்வி கேள்வி அனைத்தினிலும் ராமபிரானே
உங்கள் பேரைவிட ஞானமுண்டோ ராமபிரானே

ராமபிரானே ஹரே ராமபிரானே
ராமபிரானே ஹரே ராமபிரானே
கோடிமுறை சொன்னாலும் ராமபிரானே
உங்கள் நாமம் சலித்திடுமோ ராமபிரானே
உமை மறந்திருக்கும் நேரமெல்லாம் ராமபிரானே
என் வாழ்நாளில் வீணன்றோ ராமபிரானே

6 comments:

manivannan said...

What a lovely song'na! Every line is filled with wisdom. I loved it very much. Sure Rama must be pleased with you :)

shri ramesh sadasivam said...

Hi Mani, Thanks. Its nice you liked it. I too think Lord Rama is pleased with me, because I am very peaceful now.:)

கவிநயா said...

ரொம்ப நல்லாருக்கு ரமேஷ். "நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பதுன்னை; என்றும் பணிவதுன் மலர்த்தாள்"னு அபிராமி அந்தாதி ஒரு பாடல்ல வரும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே கருத்தை சொல்லியிருக்கீங்க. குறிப்பா எனக்குப் பிடிச்சது கடைசி இரண்டு வரிகள் -

//உமை மறந்திருக்கும் நேரமெல்லாம் ராமபிரானே
என் வாழ்நாளில் வீணன்றோ ராமபிரானே //

எத்தனை உண்மை.

ஸ்ரீராமன் உங்களுக்கு என்றும் துணையிருக்கும்படி பிரார்த்திக்கிறேன்.

shri ramesh sadasivam said...

//ஸ்ரீராமன் உங்களுக்கு என்றும் துணையிருக்கும்படி பிரார்த்திக்கிறேன்.//

மிக்க நன்றி கவிநயா.

shanandy said...

your blog is quite nice .i think so you must be a baktha of lord hanuman .so am i.visit my blog at http://jayehanuman.blogspot.com/. it is very interesting.again your blog is very wise.

shri ramesh sadasivam said...

Hi Shanandy, Welcome to my blog. Thank you so much. I am a devotee of Lord Rama and hence a devotee of Lord Hanuman too. I am delighted to have a co- devotee in my blog. Jai Shri Ram. Jai Hanuman.