CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, December 27, 2008

குரு தட்சணை


அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ஹனுமந்த் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

7 comments:

shri ramesh sadasivam said...

சென்ற வருட அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு துளசி தாசரின் ஹனுமன் சாலீஸாவை தமிழிலில் மொழி பெயர்த்தேன். நேரமிருப்பின் அன்பர்கள் அதையும் படித்து ரசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://iamhanuman.blogspot.com/2008/06/blog-post_24.html

manivannan said...

I'm dumbstruck 'na. Words fail to express the feeling I got after reading it...

Every line tugs deep in my heart. Rama has given you such a wonderful gift. I can very well proudly assert this was written by my brother & my beloved guru.

Special thanks & wishes to Hanumanji, the birthday boy, for blessing you with such a lovely poem :)

Happy birthday Hanumanji :)

manivannan said...

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

I'm getting tears reading this na. Much thanx for giving such a wonderful gift to us.

shri ramesh sadasivam said...

Thanks for your lavish comment. I am very happy to receive it. :)

Happy Hanumanth Jayanthi.

கவிநயா said...

//இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை//

அருமை, அருமை! நெஞ்சை நெகிழச் செய்த கவிதை. ஜெய் ஆஞ்சநேயர் திருவடிகள் சரணம்.

Niru said...

''மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே''
''ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?''
''நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்''
I was getting tears while I was reading the above as they were real feeling of mine.I wondered who wrote this and how did the writer know my mind!!.Then only I looked for writer's name.Touched my heart.Expecting more like this.Thanks so much & God bless you!

shri ramesh sadasivam said...

அவை எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள். என் மன நிலையை படம்பிடித்த வரிகள். உங்கள் பக்தியை என்னால் உணர முடிகிறது. அடிக்கடி வரவும். என் பிற தளங்களயும் பார்க்கவும். நன்றி!