CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, June 24, 2008

ஸ்ரீ ராமர் புகழ்



ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பலவான் ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் வியக்கும் அழகிய ராமர்
பெண்கள் மயங்கும் மோகன ராமர்
மக்கள் மகிழும் மன்னவர் ராமர்
பக்தர் போற்றும் பார்புகழ் ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் தந்த ஆண்டவன் ராமர்

ராமர் என்றால் நல்லது நடக்கும்
ராமர் என்றால் அமைதி கிடைக்கும்
ராமர் என்றால் குணங்கள் சிறக்கும்
ராமர் என்றால் கதவுகள் திறக்கும்

ராமர் என்றால் உள்ளம் உருகும்
ராமர் என்றால் உவகை பெருகும்
ராமர் என்றால் அறிவுத் தெளியும்
ராமர் என்றால் தர்மம் புரியும்

ராமர் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராமர் என்றால் செல்வம் செழிக்கும்
ராமர் என்றால் வீரம் விளங்கும்
ராமர் என்றால் வெற்றி விளையும்

ராமர் என்றால் மனது அடங்கும்
ராமர் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராமர் என்றால் யோகம் நிலைக்கும்
ராமர் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்






3 comments:

Niru said...

Yes.As you told I like this 'Ramar Pugazhal'.
I am sure you got Anjaneyar's blessings a lot.
''எளிய விருந்தினர் சபரியின் ராமர்''-This Ramar is my Ramar.
Also he is the God of Forgiving & Patient.So I feel you can write 'Ravana Ramar too'.Because first he sent Anjaneyar to Ravanan to advice and How can we forget ''இன்று போய் நாளை வா'' from Ramayanam.
I just wrote my thoughts.Pls don't mistake.

shri ramesh sadasivam said...

Yeah, we can write as Ravana- Ramar too..

I thought of writing like that in two places..

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்

here chose veera raamar, so that it will rhyme well..

I thought of using it here..

பாப வினாசனர் கோதண்ட ராமர்

but i thought I should mention KOTHANDAM, so i put it like that...

This is just sharing of ideas, right? I won't mistake. :)

Niru said...

Thank you for considered my word & explanation.Ya.I understood.
But I felt If you use the name 'Ravana Ramar' it would be like Diamond on gold.
Because Ramar is Ramar for ever.He is for every one including Ravana.I may think in diffrent way.Because I always think ''how lucky Ravana for killed by Ramar! No one can get that chance.Actually Ramar showed his kindness on Ravana by that.Without thinking of hell or next birth he could die''.