CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, February 27, 2009

ஒரு முறை உன் பெயர் சொல்லிவிட்டால்


ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே ராஜா ராம்
ராம் ராம் ராம் சீதா ராம்
ராம் ராம் ராம் ஹரே சீதா ராம்

ஒரு முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
உள்ளம் உள்ளம் உருகுதய்யா 

இரு முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
இதயம் இதயம் இளகுதய்யா

மும்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
முன்வினை யாவும் அகன்றதய்யா

நான்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
நான்மறை ரகசியம் புரிந்ததய்யா

ஐமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
ஐயம் ஐயம் அகன்றதய்யா 

அறுமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
அச்சம் மடமை அழிந்ததய்யா 

எழுமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
எண்ணங்கள் யாவும் சிறந்ததய்யா

எண்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
எண்ணிய காரியம் நடந்ததய்யா

நவமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
நவகோள் மகிழ்ந்து உதவுதய்யா

பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?

ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே ராஜா ராம்
ராம் ராம் ராம் சீதா ராம்
ராம் ராம் ராம் ஹரே சீதா ராம்

16 comments:

manivannan said...

Wonderful poem 'na!

ram ram :)

shri ramesh sadasivam said...

thanks mani.

Jai shri ram.

sury said...

You are invited to listen to this song at
http://pureaanmeekam.blogspot.com
soon.

subbu rathinam.
stamford CT USA

கவிநயா said...

//பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?//

உண்மைதான் ரமேஷ். வேறென்ன வேண்டும்? அழகான பாடல்.

shri ramesh sadasivam said...

#sury
-------
Hello Sir, Thanks for you commendable effort in making this poem into a beautiful song.

#கவிநயா
-----------
நிச்சயமாக வேறொன்றும் தேவையில்லை. நன்றி கவிநயா.

sury said...

http://www.youtube.com/watch?v=Ifrk4TiXKlY

Please cut and paste the above URL to listen to your song in different raagas adding the pictures you have sent yesterday
subburathinam.

ஜீவா (Jeeva Venkataraman) said...

Good one!

shri ramesh sadasivam said...

Thanks Jeeva.

கவிநயா said...

பாடல் உருக்கமாக அமைந்திருக்கிறது தாத்தா. படங்களும் அருமை.

Eswari said...

//உண்ணும் உணவெல்லாம் உன் இனிப்பு
காணும் கனவெல்லாம் உன் நினைப்பு
பார்க்கும் இடமெல்லம் உன் அழகு
என் மனம் தீப் பற்றிய மெழுகு...!//

//உன்
காயங்களுக்கு
மருந்தளிக்கவே
காத்திருக்கும்...
என் கைகள்...!

நீ
மருந்தளிக்கவே
காத்திருக்கும்
என் காயங்கள்...!//

//உன் பார்வையிலே
பூத்த மலர்
உன் புன்னகைக்கு
வாடுதடி..//


//உன்னை காதலிப்பதாக நான் நம்புவது
உன்னை மறக்க முடியாததால் அல்ல
மறக்க விரும்பாததால்...//

கவிதை ன்னு இப்படிஎல்லாம் எழுதி அதையும் நெட்-ல போடும் கிறுக்கன்கள் மத்தியில்

//பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?//
இவ்வளவு அழகா, பக்தியோடு சொல்லியும் அதன் பலன்கள் பற்றி எழுதும்
u r great pa. u r Genius.....

shri ramesh sadasivam said...

தோழி... இது பக்திக்கான தளம். தங்கள் கேலி ரசனைக்குரியது.... ஆனால் இந்தத் தளத்தில் வேண்டாமே.. ப்ளீஸ்.

shri ramesh sadasivam said...

தவறாக நினைக்க வேண்டாம்.

Eswari said...

ok thazha

shri ramesh sadasivam said...

:)

Eswari said...

இராமனின் நாமமே தாரக நாமம்
வேண்டும் வரங்களை தந்திடும் நாமம்
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனுக்கு
அலை கடல் தாண்டிட உதவிய நாமம்

ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்

நாராயண சொல்லும் அட்ச்சாசரத்தில்
ரா என்னும் அட்ச்சரம் ஒலித்திடுமே
அது நமசிவாய என்னும் பஞ்சா சரத்தில்
மா என்னும் ஜீவனில் கலந்திடவே
தோன்றியதே ராம நாமமே
துதித்திடுவோமே ராம நாமமே

அமுதமனைய ஸ்ரீ ராமனின் நாமத்தை
அனுதினம் பாடியே அவன் அருள் பெறுவோம்

ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்


இது எங்க பள்ளி prayer song. நல்லா இருக்கா? enga school / college prayer songs எல்லாமே நல்லா இருக்கும். எனக்கு பிடித்த பாடலில் இதும் ஓன்று.

shri ramesh sadasivam said...

நாராயண சொல்லும் அட்ச்சாசரத்தில்
ரா என்னும் அட்ச்சரம் ஒலித்திடுமே
அது நமசிவாய என்னும் பஞ்சா சரத்தில்
மா என்னும் ஜீவனில் கலந்திடவே
தோன்றியதே ராம நாமமே
துதித்திடுவோமே ராம நாமமே //

மிகப் பெரிய விஷயத்தை அழகாக சொல்லும் வரிகள். இதை நான் உணர்ந்திருக்கேன். ரொம்ப நல்லாருக்கு! முடிஞ்சா பாடி you tube-ல ஏத்துங்க.