CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, June 23, 2008

ஸ்ரீ பால கணேஷர் அன்பு ஆராதனை


ஓம்
சக்தியின் மடியில்
தவழும் கணேஷா...!

சிவனார் அணைப்பில்
மகிழும் கணேஷா...!

முருகரை அணைக்கும்
மூத்த கணேஷா...!

மாயவர் மாப்பிள்ளை
மங்கள கணேஷா...!

உனை அண்ணனாய் நினைக்க
உள்ளம் துணிந்தேன்...!

நீ அதை உடனே ஏற்க
உன்
பாதம் பணிந்தேன்...!

செயலின் வடிவம்
நீ என
உணர்ந்தேன் நானே...!

Son of Energy
Action தானே...!

நீ மனது வைத்தால்
தடைகள் வராது
மனதை வாட்டும்
தடங்கல் தராது

என் நாத ஆராதனைக்கு
உள்ளம் கரைந்தாய்...!
மறுநாள் காலை
என் கனவுக்குள் விரைந்தாய்...!

எளியவன் துதியை
அன்போடு ஏற்றாய்...!
என் கர்ம வினைகள்
பறந்தன காற்றாய்...!

கொழு கொழு தொப்பையை
ஆசையோடு தொடுகிறேன்...!
மொழு மொழு கன்னத்தில்
முத்தங்கள் இடுகிறேன்...!

அண்ணா என்று
அன்போடு அழைக்கிறேன்...!
என் ஆணவத்தை உன் கோவிலின்
பலி பீடத்தில் வைக்கிறேன்...!

செல்வம் வேண்டாம் புகழும் வேண்டாம்
சித்திகள் வேண்டாம் சிறப்புகள் வேண்டாம்
பட்டங்கள் வேண்டாம் பதவிகள் வேண்டாம்

இன்றும் என்றும்
இப்போதும் எப்போதும்
உன் அன்பு ஒன்று
அதுவே போதும்...!



5 comments:

திவா said...

ஐயா வணக்கம்!
தமிழில் ஆன்மீக கவிதைகள் பொழியறீங்க. சந்தோஷம்!
//Son of Energy
Action தானே...!//
என்ன சொல்ல வறீங்கண்ணு சொல்ல முடியுமா? கொஞ்சம் புரியலை.??
ரொம்ப அழகான பிள்ளையார்!

shri ramesh sadasivam said...

பிள்ளையாரை, செயலின்- வினையின் உருவமென்று நான் சொல்ல காரணங்கள் பௌதிகத்திலும், பக்தி இலக்கியத்திலும் இருக்கிறது. முதலில் பௌதிகத்தை விளக்குகிறேன். சக்தி என்பது energy. எந்த ஒரு செயல் நிகழ்வதாய் இருந்தாலும், அதற்கு சக்தி தேவை. எந்த ஒரு பொருளிலும் சக்தி உரைந்திருக்கிறது (potential energy). இது இயங்கு நிலைக்கு (kinetic energy) வரும் பொழுது, செயல் தோன்றுகிறது. ஆக செயல் என்பது சக்தியில் இருந்து தோன்றுகிறது. எனவே சக்தியின் பிள்ளை செயல். புராணத்தின் படி, சக்தியின் உடலில் இருந்து தோன்றியவர் பிள்ளையார். கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்கிற பாடலில்," கணபதி என்றிட கருமம் ஆதலால் " என்று ஒரு வரி உண்டு. இதுவும் நான் எழுதிய, செயலின் வடிவம் நீயென உணர்ந்தேன் என்பதும் ஒரே அர்த்தம் கொண்டது தான்.

திவா said...

please enable moderation.
some people tend to post abusive comments and they will get published.

Niru said...

''உனை அண்ணனாய் நினைக்க
உள்ளம் துணிந்தேன்''
''என் கனவுக்குள் விரைந்தாய்''..

இந்த வரிகள் என் மனதைக்கவர்ந்த வரிகள்.திரும்பவும் முழு கவிதையையும் வாசிக்க தூண்டிய வரிகள்.
I don't know how to say more about your poems & I have no words.
Only I can say you have choosen suitable name as ''iamhanuman.blogspot.com''..
Because you wouldn't believe once I read your 'Guru Thatshanai', for a second I wondered whether it's written by Anjaneyar.
Thanks a lot for your holy poems.

shri ramesh sadasivam said...

Thanks niru!