மால்பாதர் பாதுகையார்
சடகோபர் குருகூரார்
மாறனார் மரத்தடியார்
உணவற்றார் பேச்சற்றார்
உறவற்றார் உறக்கமற்றார் 10
திருவாய்மொழியார் திருத்தமிழ்மறையார்
ஞானநற்கவியார் ஞானக்கவிதமிழார்
ஞானச்சொற்திறத்தார் ஞானசொற்பலத்தார்
பத்துப்பத்தாயுரைத்தார் பத்துக்குப்பலனுறைத்தார்
நூறுமொழியுரைத்தார் மொழிக்கொருவரமளித்தார் 20
மதுரைகவிகுருவார் குருகூர்ப்பிரானார்
கற்பார்ராமபிரானைச்சொன்னார்
உயர்வறஉயர்நலஞ்சொன்னார்
உலகமுண்டபெருவாயாசொன்னார்
ஒழிவில்காலமெல்லாம்சொன்னார்
பன்னிருநாமப்பாட்டுச்சொன்னார்
வைகுந்தாமணிவண்ணனேச்சொன்னார்
சோர்விலந்தாதிசொன்னார்
ஆயிரவந்தாதிசொன்னார் 30
புளியமரத்தடியார் மால்திருவடியார்
திருவிருத்தம்தந்தார் திருவாசிரியந்தந்தார்
பெரியதிருவந்தாதிதந்தார் திருவாய்மொழிதந்தார்
தமிழ்வேதக்கடல்தந்தார் தமிழில்நான்மறைதந்தார்
மறைதந்தமாலடியார் மறைதந்தமாலனையார் 40
காரியார்மைந்தன் உடையநங்கைசேய்
வகுளாபரணார் பராங்குசனார்
நம்மாழ்வார் குலபதியார்
காரிமாறனார் சடகோபனார்
தென்குருகூரார் திருநகரியாழ்வார் 50
ஈரெட்டாண்டுமௌனி ஈரெட்டாண்டுதவசி
ஈரெட்டாண்டுவிரதர் ஈரெட்டாண்டுயோகி
அழுதிடாக்குழந்தை சிரித்திடாக்குழந்தை
பேசிடாக்குழந்தை உண்ணாக்குழந்தை
மரம்போலக்கிடந்தோன் மரம்கண்டுதவழ்ந்தோன் 60
தாய்முன்பேசான் தந்தைமுன்பேசான்
எவர்முன்னும்பேசான் பலர்முன்னும்பேசான்
சீடன்முன்பேச்சன் அத்தைத்தின்னுமென்றோன்
நல்ஞானப்பேச்சன் நல்ஞானச்சொல்லன்
ஞானக்கவிவல்லன் உலகுய்யவொருபுலவன் 70
பரமனன்றிநினையான் பரமனன்றிகாணான்
பரமனன்றியேங்கான் பரனன்றிபாடான்
பரமன்புகழ்பாட்டன் பரமன்புகழ்நாட்டன்
பரமன்குணபாட்டன் பரமன்குணநாட்டன்
பரமன்மட்டும்நாட்டன் பரமன்மட்டும்பாட்டன் 80
பரமனுக்குப்பிள்ளை பரமனுக்குப்பாட்டன்
பரமனுக்குப்பேரன் பரமனுக்குத்தாரன்
பரமனுக்காய்ப்பாட்டன் பாமரனுக்காய்ப்பாட்டன்
பாசுரவரம்தந்தோன் பாசுரத்தால்வரம்தந்தோன்
பாவல்லார்க்கருளன் பாவல்லார்க்குவரத்தன் 90
சடகோபவீரன் சடகோபமாறன்
சடம்வென்றகோபன் மடம்வென்றகோபன்
சடகோபமுனி சடகோபகுரு
சடகோபஞானி சடகோபபக்தன்
சடகோபபுலவன் சடகோபகவிஞன் 100
தெய்வபக்தசடகோபன் பக்ததெய்வசடகோபன்
பக்தசடகோபன் தெய்வசடகோபன்
அன்புசடகோபன் அறிவுச்சடகோபன்
நல்லசடகோபன் ஞானசடகோபன் 108
0 comments:
Post a Comment