சாப்பாட்டு ராமரே சாப்பாட்டு ராமரே
சாப்பாடு போட வந்த ராமரே
மக்களுக்கு சாப்பாடு போட வந்த ராமரே
நீர் கருவானீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் பிறப்பெடுத்தீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
சாப்பாட்டு ராமரே சாப்பாட்டு ராமரே
சாப்பாடு போட வந்த ராமரே
மக்களுக்கு சாப்பாடு போட வந்த ராமரே
சாப்பாட்டு ராமரே சாப்பாட்டு ராமரே
சாப்பாடு போட வந்த ராமரே
மக்களுக்கு சாப்பாடு போட வந்த ராமரே
உமக்கு பேரு வெக்க
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் தவழ்ந்தவுடன்
தசரதரும் அன்னதானம் போட்டார்
சாப்பாட்டு ராமரே சாப்பாட்டு ராமரே
சாப்பாடு போட வந்த ராமரே
மக்களுக்கு சாப்பாடு போட வந்த ராமரே
நீர் நின்றவுடன்
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் அடியெடுத்தீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் ‘அம்மா’னதும்
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் ‘அப்பா’னதும்
தசரதரும் அன்னதானம் போட்டார்
சாப்பாட்டு ராமரே சாப்பாட்டு ராமரே
சாப்பாடு போட வந்த ராமரே
மக்களுக்கு சாப்பாடு போட வந்த ராமரே
நீர் படிக்க போனீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
நீர் படிச்சு வந்தீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
முதல் யுத்தம் சென்றீர்
தசரதரும் அன்னதானம் போட்டார்
வெற்றி சேதி கேட்டு
தசரதரும் அன்னதானம் போட்டார்
சிவ வில்லொடித்த சத்தம் கேட்டு
அன்னதானம் போட்டார்
நீர் மாப்பிள்ளை ஆனதுக்கும்
அன்னதானம் போட்டார்
அவர் மருமகளை பார்த்ததுமே
அன்னதானம் போட்டார்
உங்க கல்யாணம் நடத்திவிட்டு
அன்னதானம் போட்டார்
0 comments:
Post a Comment