நன்மை ஓர் உருவாய் வந்தாய்
பண்பே ஒரு வழியாய் தந்தாய்
ராமா ராமா ஹரே ராமா ராமா
ராமா ராமா ஹரே ராமா ராமா
இருள் விலக ஒளி தான் உண்டு
நோய் விலக மருந்தும் உண்டு
வினை அகல எது தான் உண்டு?
ராமா உன் பெயரே உண்டு
ராமா ராமா ஹரே ராமா ராமா
ராமா ராமா ஹரே ராமா ராமா
காதுக்கு இசைதான் விருந்து
கண்ணுக்கு அழகே விருந்து
அறிவுக்கு எது தான் விருந்து?
ராமா உன் கதையே விருந்து
ராமா ராமா ஹரே ராமா ராமா
ராமா ராமா ஹரே ராமா ராமா
உடலுக்கு உழைப்பே சொத்து
உயிருக்கு வினையே சொத்து
மனதுக்கு எது தான் சொத்து
ராமா உன் நினைவே சொத்து
ராமா ராமா ஹரே ராமா ராமா
ராமா ராமா ஹரே ராமா ராமா
http://www.youtube.com/watch?v=PDLGFPnTfDA
முகமது பின் துக்ளக் படத்தின் முதல் பாடலான ‘நீ இல்லாத இடமேயில்லை’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ரசித்ததில் கிடைத்த உந்துதலில் அதே மெட்டில் என் ராமருக்கு ஒரு பாடல். இது போட்டி பாடலல்ல என் பக்திச்சுவையை கூட்டும் பாடல்.
இன்ஷா அல்லாஹ்!
மாஷா அல்லாஹ்!
ஜெய்ஸ்ரீராம்!
ஸ்ரீ ராமஜெயம்!
0 comments:
Post a Comment