நற்றுணையாவது நமசிவாயம்
நாதனின் நாமம் நமசிவாயம்
நண்பனாம் நண்பனாம் நமசிவாயம்
நன்மைகள் நல்கிடும் நமசிவாயம்
நல்வினை கூட்டிடும் நமசிவாயம்
தீர்த்திடும் தீவினை நமசிவாயம்
வரம்பல வழங்கிடும் நமசிவாயம்
மனம்போல் அருளிடும் நமசிவாயம்
அன்பின் வடிவாம் நமசிவாயம்
அறிவுச் சுடராம் நமசிவாயம்
ஐந்தினை ஆண்டிடும் நமசிவாயம்
ஐந்தினை அடக்கிடும் நமசிவாயம்
பாவங்கள் போக்கிடும் நமசிவாயம்
பயமது போக்கிடும் நமசிவாயம்
பாசமாம் பாசமாம் நமசிவாயம்
பாசங்கள் அறுத்திடும் நமசிவாயம்
திரிசடை அணிந்த நமசிவாயம்
திரிபுரம் எரித்த நமசிவாயம்
தீக்கக்கும் நுதலுடை நமசிவாயம்
திருநீறு தரித்திடும் நமசிவாயம்
த்ரியம்பக தேகனாம் நமசிவாயம்
தெவிட்டா அமுதாம் நமசிவாயம்
திசைகள் எங்கும் நமசிவாயம்
திருநடம் புரியும் நமசிவாயம்
கங்காதரனாம் நமசிவாயம்
கண்ணுதல் இறையாம் நமசிவாயம்
கருணைக் கடலாம் நமசிவாயம்
கண்ணப்பர் கண்ணாம் நமசிவாயம்
கன்னல் அமுதாம் நமசிவாயம்
கலங்கம் அற்ற நமசிவாயம்
காளியை வென்ற நமசிவாயம்
காலனை உதைத்த நமசிவாயம்
கர்வமற்ற நமசிவாயம்
கர்வம் அகற்றும் நமசிவாயம்
கற்பக தருவாம் நமசிவாயம்
கண்கண்ட தெய்வம் நமசிவாயம்
கடியும் நெகிழும் நமசிவாயம்
கவிகள் புனையும் நமசிவாயம்
கலைகள் நல்கிடும் நமசிவாயம்
களிநடம் புரியும் நமசிவாயம்
திருநடம் புரியும் நமசிவாயம்
சினநடம் புரியும் நமசிவாயம்
துயர்நடம் புரியும் நமசிவாயம்
மகிழ்நடம் புரியும் நமசிவாயம்
நடனக் கோவாம் நமசிவாயம்
நடனம் நல்கிடும் நமசிவாயம்
நடனச் சிதம்பரன் நமசிவாயம்
சிதம்பர ரகசியன் நமசிவாயம்
சக்திகள் நல்கிடும் நமசிவாயம்
சக்தியின் சக்தியின் நமசிவாயம்
இடபுரம் பெண்ணுடை நமசிவாயம்
பார்வதி புருஷனாம் நமசிவாயம்
காமாட்சி கணவனாம் நமசிவாயம்
மலைமகள் மணாளன் நமசிவாயம்
மீனாட்சி சுந்தரன் நமசிவாயம்
அம்பாள் அன்பனாம் நமசிவாயம்
இபமுகர் அப்பனாம் நமசிவாயம்
அறுமுகர் தந்தையாம் நமசிவாயம்
எழுமுனி குருவாம் நமசிவாயம்
குருபரன் சீடனாம் நமசிவாயம்
பார்த்தற் கருளிய நமசிவாயம்
பீமற்கு அருளிய நமசிவாயம்
பாண்டவர்க் கருளிய நமசிவாயம்
ராமற்கருளிய நமசிவாயம்
ராமநாம நாவினன் நமசிவாயம்
விஷ்ணுநாம நாவினன் நமசிவாயம்
யோகங்கள் புரியும் நமசிவாயம்
யோகங்கள் அருளும் நமசிவாயம்
யோகநல் மூர்த்தியாம் நமசிவாயம்
ஆதிநல் யோகியாம் நமசிவாயம்
விண்ணவர் போற்றும் நமசிவாயம்
மண்ணவர் போற்றும் நமசிவாயம்
அரனாம் அரனாம் நமசிவாயம்
ருத்ரனாம் ருத்ரனாம் நமசிவாயம்
திருநீலகண்டனாம் நமசிவாயம்
திரிபுராந்தகனாம் நமசிவாயம்
திரிசடாதாரியாம் நமசிவாயம்
சந்திர சூடனாம் நமசிவாயம்
பசுபதி பசுபதி நமசிவாயம்
பார்வதி பதயே நமசிவாயம்
கையிலாய நாதனாம் நமசிவாயம்
காசிநாதனாம் நமசிவாயம்
ராமேஸ்வரனாம் நமசிவாயம்
அண்ணாமலையாம் நமசிவாயம்
காளஹஸ்தி நாதனாம் நமசிவாயம்
சிதம்பர நாதனாம் நமசிவாயம்
ஏகாம்பரேசா நமசிவாயம்
சம்புகேசா நமசிவாயம்
லிங்கநல்லுருவனாம் நமசிவாயம்
லிங்கேஸ்வரனாம் நமசிவாயம்
ஆணினுள் லிங்கம் நமசிவாயம்
பெண்ணினுள் லிங்கம் நமசிவாயம்
அலியினுள் லிங்கம் நமசிவாயம்
ஆவினுள் லிங்கம் நமசிவாயம்
மரத்தினுள் லிங்கம் நமசிவாயம்
செடியினுள் லிங்கம் நமசிவாயம்
சூரிய லிங்கமாம் நமசிவாயம்
சந்திர லிங்கமாம் நமசிவாயம்
இந்திர லிங்கமாம் நமசிவாயம்
குபேர லிங்கமாம் நமசிவாயம்
தர்ம லிங்கமாம் நமசிவாயம்
பீம லிங்கமாம் நமசிவாயம்
பார்த்த லிங்கமாம் நமசிவாயம்
ராம லிங்கமாம் நமசிவாயம்
கயிலை வாசனே நமசிவாயம்
நந்தியார் பாசனே நமசிவாயம்
குருசிவாயவே நமசிவாயம்
சிவசிவாயவே நமசிவாயம்
0 comments:
Post a Comment