கெளசல்யபுத்திரன் தசரதபுத்திரன்
சுமித்திராபுத்திரன் கைகேயிபுத்திரன்
லட்சுமணசோதரன் பரதசோதரன்
சத்ருக்னசோதரன் ஶ்ரீசீதாநாயகன்
அருங்குணக்குன்றன் பெருங்கருணைக்கடலன் (10)
அகன்றமலர்க்கண்ணன் அகன்றமலர்மார்பன்
நீண்டதிருக்கையன் நேசமுள்ளநெஞ்சன்
மலையனையதோளன் மண்மகள்மணாளன்
வில்பிடித்தகையன் அம்பெடுத்தவிரலன்
விடுவிக்கும்பாதன் சிறைபிடிக்கும்பண்பன் (20)
அன்புடையராமன் அழகுடையராமன்
அறிவுடையராமன் திறமுடையராமன்
பண்புடையராமன் பணிவுடையராமன்
சிறப்புடையராமன் செல்வமிகுராமன்
ஐம்புலன்வென்றராமன் அற்புதநல்ராமன்(30)
நல்மன்னன் நல்மனதன்
நற்சொல்லன் நற்செயலன்
நற்படையன் நற்கொடையன்
நன்மையொருரூபன் நம்புதற்குதோதன்
நாட்டுக்கொருதலைவன் நன்மைக்கொருதலைவன் (40)
நன்மையதைக்காப்பன் தீமையதைதீர்ப்பன்
பொய்யுமதைப்பொய்ப்பன் மெய்யுமதைமெய்ப்பன்
அன்புமதைவார்ப்பன் அன்புடனேக்காப்பன்
அழகுடனேநடப்பன் அகக்கடலில்கிடப்பன்
அம்பெடுத்துத்தொடுப்பன் ஆபத்ததைத்தடுப்பன் (50)
விண்ணவர்க்குமன்னன் மண்ணவர்க்குமன்னன்
தர்மத்தின்தலைவன் அதர்மமதனெதிரி
சத்தியத்தின்நண்பன் சத்துவத்தினதிபன்
விரதமதில்வென்றோன் வீரமதால்வென்றோன்
ஈரமதால்வென்றோன் இதயமதில்நின்றோன் (60)
சீதையின்இதயன் சீதையுடையிதயன்
சீதையினின்பன் சீதையின்றிதுன்பன்
சீதையினன்பன் சீதையின்நண்பன்
சீதையினுயிர் சீதையின்மூச்சு
சீதையின்புகழ் சீதையுறைமார்பன் (70)
லக்ஷ்மணரின்மன்னன் பரதரின்மன்னன்
சத்ருக்னரின்மன்னன் அனுமனின்மன்னன்
அன்பர்தம்மன்னன் பண்பர்தம்மன்னன்
பக்தருக்குமன்னன் பரதவர்க்குமன்னன்
பாருளோர்க்குமன்னன் வானுளோர்க்குமன்னன் (80)
சீதைமனவாசன் லக்ஷ்மணமனவாசன்
பரதர்மனவாசன் சத்ருக்னர்மனவாசன்
அனுமன்மனவாசன் அன்பர்மனவாசன்
ருத்ரர்மனவாசன் சுத்தர்மனவாசன்
நல்லோர்மனவாசன் நல்லோர்களின்நேசன் (90)
அகல்யாப்ரியன் அனுசுயாப்ரியன்
கெளசல்யாப்ரியன் கெளதமர்ப்ரியன்
தசரதப்ரியன் தசகண்டப்ரியன்
சபரிப்ரியன் சத்தியப்ரியன்
சனநலப்ரியன் சனங்களின்ப்ரியன் (100)
சீதாராமன் கல்யாணராமன்
கண்ணியராமன் புண்ணியராமன்
லக்ஷ்மணராமன் பரதராமன்
சத்ருக்னராமன் அனுமந்த்ராமன் (108)
0 comments:
Post a Comment