அரியரன் அரனரி
சிவவிஷ்ணு விஷ்ணுசிவன்
மலர்க்கண்ணமுக்கண்ணன் முக்கண்ணமலர்க்கண்ணன்
சடையப்பக்கேசவன் கேசவசடையப்பன்
குளிர்க்கண்ணயனல்கண்ணன் அனல்கண்ணக்குளிர்க்கண்ணன் 10
இடபவாகனன் கருடவாகனன்
அலைமேல்கிடந்தோன் மலைமேலமர்ந்தோன்
மலைமகள்மணந்தோன் அலைமகள்மணந்தோன்
அரவணைத்துயில்வோன் அரவணியணிவோன்
நந்திமேலுடுக்கையன் சேடன்மேல்படுக்கையன் 20
மலைமகளண்ணன் அலைமகளண்ணன்
மலைமகள்கேள்வன் அலைமகள்கேள்வன்
கணபதிமாமன் கணபதிதந்தை
முருகவேளப்பன் முருகவேள்மாமன்
ஐயப்பனன்னை ஐயப்பன்தந்தை 30
ஐந்தெழுத்தன் எட்டெழுத்தன்
நால்வேதமுரைத்தோன் ஆகமமளித்தோன்
தவயோகமளிப்போன் செயல்யோகமளிப்போன்
மனதுக்கினியன் உடலுக்கினியன்
உடல்வினையாள்வோன் மனம்வினையாள்வோன் 40
அலங்காரப்ரியன் அபிசேகப்ரியன்
அன்னப்ரியன் வெண்ணைப்ரியன்
உடன்வந்துகாப்போன் வரம்தந்துகாப்போன்
பிரம்மன்தலைகொய்தோன் பிரம்மன்திமிர்கொய்தோன்
குற்றங்கள்தடுப்போன் பாவங்கள்களைவோன் 50
சக்தியைக்கொண்டோன் சக்தியைக்கொடுத்தோன்
சக்கரம்கொண்டோன் சக்கரம்கொடுத்தோன்
விட்ணுவுக்குதவினன் சிவனார்க்குதவினன்
கங்கைதந்தபாதன் கங்கையேற்றதலையன்
திங்களணிபிரான் சூரியவம்சயணி 60
சத்துவக்குணபிரம்மம் தமோக்குணபிரம்மம்
தமவென்னும்பலம் சத்துவமெனும்குணம்
அண்டநிறைபொருள் அண்டமானபொருள்
ஐம்பூதமானோன் ஐம்பூதவாத்மன்
உயிர்களிலுயிர் உயிர்களுல்லிங்கம் 70
உடற்பரபிரம்மம் உயிர்பரபிரம்மம்
பரபிரம்மவிட்ணு பரபிரம்மசிவன்
பரபிரம்மலிங்கன் பரபிரம்மாத்மன்
ஆன்மப்பரபரன் லிங்கப்பரபரன்
பேரண்டபிரான் பேராத்மபிரான் 80
நெல்லிக்கனி நாவல்கனி
கருங்கல்லன் சாளக்ராமன்
துளசியன் வில்வன்
ருத்ராட்சன் அரசன்
வனசிம்மன் வனப்புலியன் 90
பால் வெண்ணை
தேநீர் குளம்பி
அன்னம் நெய்
வயிறாக்னி சிரசாக்னி
உடலாளும்மூளை மனதாலுமிதயம் 100
சமூகநிலைநுற்பன் சக்திநிலைநுற்பன்
உடலியலன் உளவியலன்
நல்லோர்க்குநலன் எல்லோர்க்கும்நலன்
மகாயோகி மாமன்னன் 108
0 comments:
Post a Comment