வைகுண்டன் பாற்கடலன்
பாம்பணையன் பரமாத்பன்
புன்னகையன் பொன்னகையன்
பெருவிழியன் மலர்விழியன்
பேரழகன் பேரிதயன் 10
சேசசாயி சேசப்ரியன்
சேசசோதரன் சேசானுசன்
சேசவாசன் சேசநேசன்
சேசேசன் சேசேச்வரன்
சேசமடியன் சேசயிதயன் 20
சங்குதாரி சக்ரதாரி
வாள்தாரி கதைதாரி
சார்ங்கதாரி பங்கயதாரி
மணிதாரி மாலைதாரி
மகரக்குண்டலன் பொன்மகுடன் 30
பாஞ்சசன்யன் சுதர்சனன்
நந்தகன் கௌமோதகன்
சார்ங்கன் பங்கயக்கையன்
கௌச்துபன் வனமாலையன்
மகரக்காதன் கனகக்ரீடன் 40
பொற்பாதன் பவளப்பாதன்
புகழ்ப்பாதன் புனிதப்பாதன்
அழகுப்பாதன் அற்புதப்பாதன்
அருமைப்பாதன் அக்கறைப்பாதன்
அறிவளிக்கும்பாதன் ஆற்றல்மிகுபாதன் 50
நாபிக்கமலன் கண்கமலன்
முகக்கமலன் கரக்கமலன்
செவிக்கமலன் அடிக்கமலன்
கமலக்காதன் கமலப்பாதன்
கமலக்கண்ணன் கமலமார்பன் 60
கண்ணிரண்டுபூவினன் இதயக்கமலப்பூவினன்
நாபிக்கமலப்பூவினன் மலர்ந்தமுகப்பூவினன்
கரமிரண்டுபூவினன் பாதமிருபூவினன்
இதழிரண்டுபூவினன் கத்திரிப்பூகாதினன்
மல்லிநகைப்பூவினன் பத்துவிரல்பூவினன் 70
ஆத்மன் பரமாத்மன்
பேராத்மன் மகாத்மன்
அண்டாத்மன் லிங்காத்மன்
சகலவுயிராத்மன் சகலபொருளாத்மன்
கர்மாத்மன் தர்மாத்மன் 80
மச்சன் கூர்மன்
வராகன் நரசிம்மன்
வாமனன் விக்ரமன்
பரசுராமன் அரசுராமன்
பலராமன் கிருஷ்ணன் 90
சத்துவன் சத்துவாதிபதி
சத்துவக்குணன் சத்துவக்கடல்
சத்துவக்குன்று சத்துவயீசன்
சத்துவவூற்று சத்துவகிடங்கு
சத்துவபலன் சத்துவவரன் 100
ஞானம்தத்தும்பாதன் ஞானம்தத்தும்காலன்
ஞானம்தத்துமதிருவடியன் ஞானம்தத்தும்திருவடிக்கமலன்
ஞானம்தத்துமடியன் ஞானம்தத்துமடிக்கமலன்
ஞானக்காலன் ஞானப்பாதன் 108
0 comments:
Post a Comment