பிள்ளையார் பிள்ளைகுணத்தார்
ஆனைமுகத்தார் அழகுமுகத்தார்
துதிக்கையார் தொப்பையார்
பானைவயிற்றார் பாசாங்குசத்தார்
ஓரெழுத்தர் ஒற்றைக்கொம்பர் (10)
சக்திபுத்ரன் பார்வதிபுத்ரன்
ஈசன்மகன் ஈயும்குணன்
முருகத்தமையன் முழுமுதலுருவன்
சித்திமணாளன் புத்திமணாளன்
ஐந்துகரன் அபயக்கரன் (20)
ஆனைமுகத்தன் ஆனைகுணத்தன்
ஆனைக்காதன் ஆனைக்கண்ணன்
ஆனைகரத்தன் ஆனைகழுத்தன்
ஆனைத்தலையன் ஆனைசிரசன்
ஆனைநெற்றியன் அனைத்திலும்வெற்றியன் (30)
பார்வதிப்பிள்ளை பரமசிவப்பிள்ளை
மாலவர்மருகன் நான்முகர்மருகன்
ஆறுமுகரண்ணன் ஐங்கரநன்னன்
சித்தியவள்நாதன் புத்தியவள்நாதன்
ஒளவையார்பேரன் சுண்டெலிமேலன் (40)
அவல்பொறிதின்றோன் மோதகம்தின்றோன்
கொழுக்கட்டைத்தின்றோன் குபேரனிடம்தின்றோன்
கவலையறதின்றோன் கர்வமறதின்றோன்
அருகம்புல்தின்றோன் அகமகிழ்ந்துதின்றோன்
நல்பக்தர்தரதின்றோன் ஞானக்கனிவென்றோன் (50)
பானைவயிறன் பிள்ளைவயிறன்
அண்டவயிறன் குண்டுவயிறன்
அழகுவயிறன் அருளும்வயிறன்
மத்தளவயிறன் மாலைபுரள்வயிறன்
தொப்புள்வயிறன் தொப்பைவயிறன் (60)
கொலுசுப்பாதன் மெட்டிப்பாதவிரலன்
ஒட்டியாணயிடையன் அரவணிவயிறன்
மோதிரக்கைவிரலன் வளையலணிகரத்தன்
ஆரமணிகழுத்தன் தோடணிகாதன்
மகுடமணித்தலையன் முப்புரிநூலன் (70)
சிவன்தலைக்கேட்டவன் சிதறுத்தேங்காயேற்றவன்
சுதர்சனம்விழுங்கினோன் தோப்புகரணமேற்றவன்
பாரதமெழுதினோன் பார்புகழெய்தினோன்
தன்கொம்பையுடைத்தவன் கஜமுகனையொழித்தவன்
அம்மையப்பர்சுற்றினோன் நல்ஞானக்கனிபற்றினோன் (80)
விநாயகன் விக்னேசன்
கணபதி கணேசன்
விகடன் வயிறன்
ஐங்கரன் முகக்கரன்
இபமுகன் வேழமுகன் (90)
செயலுருவன் செயலிறைவன்
முக்குணத்தன் மும்மதத்தன்
தடையெடுப்பன் தடையழிப்பன்
வினையெடுப்பன் வினையழிப்பன்
துயர்தடுப்பன் துயர்துடைப்பன் (100)
வீரவிநாயகன் வெற்றிவிநாயகன்
சக்திவிநாயகன் செல்வவிநாயகன்
கரமருள்விநாயகன் வரமருள்விநாயகன்
கருணைவிநாயகன் கற்பகவிநாயகன் (108)
0 comments:
Post a Comment