ஆர்யபுத்ர ஆனந்தம் கௌசல்யபால பொக்கிஷம்
வசிஷ்டசிஷ்ய சோபிதம் ஸ்ரீவிஸ்வமித்ரசேவகம்
அகல்யசாபஅந்தகம் ஸ்ரீயீசசாபநாசனம்
சீதேபத்மபூஷணம் ஸ்ரீஜனகராஜபுண்ணியம்
பித்ருவாக்யரக்ஷகம் பவித்ரகுக் யாலிங்கனம்
பரத்துவாஜநேசகம் ஸ்ரீசித்ரகூடவாசமம்
லக்ஷ்மணாதிசேவகம் ஸ்ரீபரதபக்தபூஜிதம்
அனுஷ்ய அத்ரிதரிசனம் விராதராக்ஷமோக்ஷகம்
ரிஷ்யகஷ்டஅந்தகம் சுதீக்ஷ்ணரிஷ்யபந்தகம்
அகஸ்தியரிஷ்யசேவிதம் ஸ்ரீஅக்ஷ்யபாணஏற்பிதம்
சூர்ப்பண்யஅங்கநாசனம் கரதூஷணாதிநாசனம்
மாரீசவேஷமர்த்தனம் சபரீசமர்ப்பஏற்பிதம்
சுக்ரீவமித்ரபந்தகம் கர்வவாலிஅந்தகம்
லங்கசேதுபந்தனம் ஸ்ரீலங்கசர்வநாசனம்
ஸ்ரீசீதாராமாலிங்கனம் மேகவேகபுஷ்பகம்
பரதசோகநாசனம் ஸ்ரீராமசிம்மஆசனம்
ஆஞ்சநேயசேவகம் ஸ்ரீஆஞ்சநேயவாசகம்
ஆஞ்சநேயவாசகம் ஸ்ரீராமநாமநர்த்தனம்
ஆஞ்சநேயநேசகம் ஸ்ரீஆஞ்சநேயநெஞ்சகம்
ஆஞ்சநேயநெஞ்சகம் ஸ்ரீசீதாராமதர்சனம்
ஸ்ரீராமபஞ்சரத்னகீதம் ராமஞானசோபிதம்
ஸ்ரீராமபஞ்சரத்னகீதம் ராமநாமசேவிதம்
ஸ்ரீராமபஞ்சரத்னகீதம் ராமபுண்யசோபிதம்
ஸ்ரீராமபஞ்சரத்னகீதம் ராமபாதசேவிதம்
கணேஷ பஞ்சரத்னமும் நானும்:
கணேஷபஞ்ச ரத்னம் எனக்கு மிகவும் பிடித்தமானது. சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பின்னணி இசையாகவே கணேஷ பஞ்ச ரத்ன பாடல் எனக்கு இருந்து வருகிறது. அது எப்படி என்று தெரியவில்லை வளர்பிறை சதுர்த்தி விரதத்தின் பொழுது இந்த பாடலை நான் கேட்பது மிக அரிது. ஆனால் சங்கட ஹர சதுர்த்தி என்றால் இந்த பாடல் தானாக என்னை ஆட்கொள்ளும்.
ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த இதே போல ராமருக்கு ஒரு பாடல் இயற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்தது. நேற்று சங்கட ஹர சதுர்த்தி விரதம் முடித்தேன். இன்று அதன் பலனாக என்னை இந்த பாடலை எழுத வைத்து விட்டார் யானைமுக அன்புப் பிள்ளையார்.
இது என் மூலமாக தன் தாய் மாமாவுக்கு பிள்ளையார் கொடுத்தனுப்பிய அன்பளிப்பாகவே கருதி, ஸ்ரீராமர் முன்பாக இந்த ராமபஞ்சரத்னத்தை சமர்ப்பிக்கிறேன்.
4 comments:
அருமையான அன்பளிப்பு அண்ணா :-)
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம் மணி
ஸ்ரீராமபஞ்சரத்னகீதம்
தன் தாய் மாமாவுக்கு பிள்ளையார் கொடுத்தனுப்பிய அன்பளிப்பு அபாரம்..
பாராட்டுக்கள்..!
நன்றி மேடம்! :)
விநாயக ஜெயம்!
புவிநாயக ஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!!
Post a Comment