ரோம ரோமமு ராம நாமமே!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்
நன்றியுரை
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Wednesday, March 25, 2020
நவரத்ன ராமர்
பதினாறு புகழ் கொண்டவரே ராமா ராமா
பதினாறு பெயர் கொண்டவரே ராமா ராமா
பதினாறு குணம் கொண்டவரே ராமா ராமா
பதினாறு கொள்கை கொண்ட ராமா ராமா
பதினாறு லக்ஷணங்கள் ராமா ராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு உறவுகளை ராமா ராமா
இதயத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு நல்ல காதைகள் ராமா ராமா
வாழ்க்கையில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு வளங்களை ராமா ராமா
செவ்வனே நீர் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு வார்த்தைகளை ராமா ராமா
எவருக்கும் சொல்லி வைத்தீர் ராமா ராமா
ஈரெட்டு ஈரெட்டாய் ராமா ராமா
எட்டெழுத்தை மிஞ்சி நின்றீர் ராமா ராமா
எட்டெழுத்து நாராயணா ராமா ராமா
இறங்கி வந்த ஈரெழுத்தே ராமா ராமா
எட்டாத எட்டெழுத்தை ராமா ராமா
கிட்ட வைத்த ஈரெழுத்தே ராமா ராமா
பதினாறு பதினாறாய் ராமா ராமா
ஒன்பது பதினாறை உம்மில் கண்டேன் ராமா ராமா
ஒவ்வொரு பதினாறும் ரத்தினமாம் ராமா ராமா
நவரத்தினங்கள் உம்மிலுண்டு ராமா ராமா
எட்டெழுத்து நாராயணர் புலியோ ராமா?
பதினாறடி பாய்ந்த குட்டி நீரோ ராமா?
பதினாறடிகள் பாய்ந்த பின்பும் ராமா ராமா
பணிவன்றோ உங்கள் அணி ராமா ராமா!
உங்கள் பதினாறு புகழ்களை ராமா ராமா
சொல்லி நான் மகிழ்வேனே ராமா ராமா
அது தந்திடும் மகிழ்ச்சியை ராமா ராமா
என் சொல்லி பகர்வேனோ ராமா ராமா
தான் தாக்கப் படுகையிலும் ராமா ராமா
நீங்கள் பெண்மையதை மதித்தவர் ராமா ராமா
பாலக வீரனாய் ராமா ராமா
நீங்கள் வேள்வியைக் காத்தவர் ராமா ராமா
பெரு வீரர்கள் அசைக்கா வில்லை ராமா
நீங்கள் எளிதாய் முறித்தவர் ராமா ராமா
நல்ல பரசுராம வில்லினை ராமா
நாணேற்றி நின்றவரே ராமா ராமா
சித்தியின் வார்த்தையை ராமா ராமா
சிரம் மேல் கொண்டவரே ராமா ராமா
தந்தையின் சொல்லை ராமா ராமா
மெய்யாக்கித் தந்தவரே ராமா ராமா
சத்தியத்தை சத்தியத்தை ராமா ராமா
கண்ணாகக் காத்தவரே ராமா ராமா
ஏகபத்னி விரதத்தில் ராமா ராமா
ஏகபிடி கொண்டு நின்ற ராமா ராமா
வைத்த குறி எப்பொழுதும் ராமா ராமா
தப்பாமல் அம்புவிட்ட ராமா ராமா
ஐம்புலனை எப்பொழுதும் ராமா ராமா
கட்டுக்குள் வைத்திருந்த ராமா ராமா
எளியவர் விருந்தினை ராமா ராமா
கனிவோடு ஏற்பவரே ராமா ராமா
சரணென்று வந்தவர்க்கு ராமா ராமா
அரணாக நிற்பவரே ராமா ராமா
எதிர்த்து வந்த அரக்கனுக்கும் ராமா ராமா
ஒரு முறை அன்பு செய்த ராமா ராமா
திருந்தாத அரக்கனையே ராமா ராமா
வெறுப்பின்றி கொன்றொழித்த ராமா ராமா
உங்கள் உயிரான மனைவியையும் ராமா ராமா
கடமை ஆற்ற தியாகம் செய்தீர் ராமா ராமா
உங்கள் உடன் வாழ்ந்த ஜீவனெல்லாம் ராமா ராமா
முக்தி பெற உதவி செய்தீர் ராமா ராமா
உங்கள் பதினாறு பெயர் சொல்லி ராமா ராமா
உங்களை பணிவுடனே நான் துதிப்பேன் ராமா ராமா
என்றும் என் இதயத்தில் ராமா ராமா
இருந்திடுவீர் இருந்திடுவீர் ராமா ராமா
ராமா ரகுகுலதிலகா ஸ்ரீராமா ஸ்ரீராமச்சந்த்ரா
கௌசல்யராமா தசரதராமா அயோத்யராமா கோசலராமா
சீதாராமா ஜானகிராமா ராஜாராமா கோதண்டராமா
லக்ஷ்மணக்ரஜா பரதக்ரஜா சத்ருக்னக்ரஜா ஹனுமந்த்ராமா
உங்கள் திருப்பெயரை சொல்லிச் சொல்லி ராமா ராமா
பதினாறு நன்மைகள் நான் பெற்றேன் ராமா ராமா
அவை ஒவ்வொன்றாய் சொல்லுகிறேன் ராமா ராமா
அதை அணைவருக்கும் அறியவைப்பீர் ராமா ராமா
உங்கள் பேரைச் சொன்னதுமே ராமா ராமா
நல்லதுவும் நடந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
அமைதி எனை ஆண்டதுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
என் குணமதுவும் சிறந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
மகிழ்ச்சியதும் பிறந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
என் உள்ளம் உருகியது ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
உவகை உள்ளே பெருகியது ராமா ராமா
என் அறிவும் தெளிந்ததுவே ராமா ராமா
தர்மமதும் புரிந்ததுவே ராமா ராமா
வீரமதும் விளங்கியதே ராமா ராமா
வெற்றியதும் விளைந்ததுவே ராமா ராமா
செல்வமும் செழித்ததுவே ராமா ராமா
கதவுகளும் திறந்தனவே ராமா ராமா
மனமதுவும் அடங்கியது ராமா ராமா
புலன்களும் ஒடுங்கினவே ராமா ராமா
யோகமதும் நிலைத்ததுவே ராமா ராமா
மோக்ஷமதும் கிடைத்ததுவே ராமா ராமா
வரமளித்த பெயரென்றோ ராமா ராமா
வாழ்வளித்த பெயரன்றோ ராமா ராமா
உங்கள் பதினாறு குணங்களை ராமா ராமா
பக்தியுடன் சொல்லிடுவேன் ராமா ராமா
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
பதினாறு குணங்களையும் ராமா ராமா
நான் பெற்றிடவும் அருள்புரிவீர் ராமா ராமா
பதினாறு கொள்கைகளை ராமா ராமா
கண்ணாகக் காத்திருந்தீர் ராமா ராமா
பதினாறு கொள்கைகளை ராமா ராமா
பின்பற்றி வாழ்ந்திடுவேன் ராமா ராமா
உண்மைவார்த்தைபேசுதல் உதவும்வார்த்தைபேசுதல்
சகலருக்கும்உதவுதல் நம்பியோரைக்காப்பாற்றுதல்
பெரியோரைமதித்தல் சிறியோரைஅணைத்தல்
நன்மையைப்போற்றுதல் தீமையைதூற்றுதல்
உடலைவலிமையாக்குதல் மனதைபுனிதமாக்குதல்
புத்திசெழிக்கவைப்பது சித்திசேர்த்துவைப்பது
நன்மைக்காய்ப்பிடிவாதம் அமைதிக்காய்ப்பெருந்தன்மை
நல்லவர்க்குஈரகுணம் அல்லவர்க்குவீரகுணம்
பதினாறு லட்சணங்கள் ராமாராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமாராமா
லட்சணங்கள் ஒவ்வொன்றாய் ராமாராமா
சொல்லிடுவேன் சொல்லிடுவேன் ராமாராமா
அகன்றதிருகண்களும் அகன்றதிருநெற்றியும்
அலர்ந்ததிருமுகமதும் செம்பவளைஇதழதும்
கதித்திருக்கும்கன்னங்கள் பற்கள்வெள்ளைவண்ணங்கள்
பூசியநற்கழுத்ததும் எடுப்பானதாடையும்
நீண்டதிருக்கைகளும் வலுத்தநற்புயங்களும்
சிவந்தஉள்ளங்கைகளும் உருண்டிருக்கும்விரல்களும்
அகண்டநல்மார்பதும் திரண்டநற்தோள்களும்
ஒட்டியநல்வயிறதும் சிறுத்தநல்லிடையதும்
தந்தையாகதசரதர் அன்னையாககோசலை
தம்பிகளாய்மூன்றுபேர் சிற்றன்னைமூன்றுபேர்
நண்பர்கள்மூன்றுபேர் நல்மனைவியாய்ஜானகி
சேவகனாய்லச்மணர் சேய்களாய்லவகுசர்
குருவாகமூவரும் சீடனாய்பரதரும்
தூதனாயனுமனும் தெய்வமாய்சிவனும்
அமைச்சனாய்பரதரும் பக்தராய்சிவனும்
தளபதியாய்யங்கதன் ராஜாராமரின்குடிகளும்
உன் ஈராறு உறவுகளை ராமாராமா
உவகையுடன் கூறினேனே ராமாராமா
உன் பதினாறு கதைகளை ராமாராமா
உண்மையாய் கூறிடுவேன் ராமாராமா
கௌசல்யை மடியினிலே பிறந்த கதை ஒன்று
தாசரதரின் மார்பினிலே வளர்ந்த கதை ஒன்று
வசிட்டரிடம் சீடராகி கற்ற கதை ஒன்று
கௌசிகரிடம் பாணம் பல பெற்ற கதை ஒன்று
சிக்கீரமே சிவவில்லை முறித்த கதை ஒன்று
பரசுரர்முன் விஷ்ணுவில் தரித்த கதை ஒன்று
தந்தைக்காய் வனம்புகுந்து சென்ற கதை ஒன்று
பாதுகையை பரிசளத்து நின்ற கதை ஒன்று
சூர்ப்பணகை மூக்கதனை அரிந்த கதை ஒன்று
சீதையை தொலைத்துவிட்டு அலைந்த கதை ஒன்று
வாலியை மறைந்துநின்று கொன்ற கதை ஒன்று
யுத்தம் செய்து ராவணனை வென்ற கதை ஒன்று
மகுடமதை தலையதனில் ஏற்ற கதை ஒன்று
அசுவமேத யாகமதை செய்த கதை ஒன்று
மக்களுக்காய் சீதையை பிரிந்த கதை ஒன்று
சீதையின் பொற்சிலையுடன் வாழ்ந்த கதை ஒன்று
பதினாறு செல்வங்களைய ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா
கல்வி புகழ் வலிமை வெற்றி ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா
நன்மக்கள் நல்லூழ் பொன் நெல்
அறிவு அழகு பெருமை இளமை
நுகர்ச்சி துணிவு நோயின்மை வாழ்நாள்
நிறைவாக பெற்றிருந்தீர் ராமாராமா
இப்படியே இப்படியே ராமாராமா
ஒன்பது பதினாறுகள் ராமாராமா
உங்களில் நான் கண்டேன் ராமாராமா
நவரத்ன ராமரே ராமா ராமா
Posted by ramesh sadasivam at 5:58 PM 0 comments
Saturday, February 1, 2020
அயக்ரீவர் 108 நாம துதி
குதிரைமுகன் குதிரைகாதன்
குதிரைகன்னன் குதிரைக்கண்ணன்
குதிரைமூக்கன் குதிரைவாயன்
குதிரைநாக்கன் குதிரைப்பல்லன்
குதிரைத்தலையன் குதிரைநெற்றியன் 10
பரிமுகன் பரிகாதன்
பரிகன்னன் பரிகண்ணன்
பரிமூக்கன் பரிவாயன்
பரிநாக்கன் பரிப்பல்லன்
பரித்தலையன் பரிநெற்றியன் 20
அயமுகன் அயகாதன்
அயகன்னன் அயகண்ணன்
அயமூக்கன் அயவாயன்
அயநாக்கன் அயபல்லன்
அயத்தலையன் அயநெற்றியன் 30
அசுவமுகன் அசுவகாதன்
அசுவகன்னன் அசுவகண்ணன்
அசுவமூக்கன் அசுவவாயன்
அசுவநாக்கன் அசுவபல்லன்
அசுவத்தலையன் அசுவநெற்றியன் 40
ஒளிர்முகன் ஒளிர்காதன்
ஒளிர்கன்னன் ஒளிர்க்கண்ணன்
ஒளிர்மூக்கன் ஒளிர்வாயன்
ஒளிர்நாக்கன் ஒளிர்பல்லன்
ஒளிர்த்தலையன் ஒளிர்நெற்றியன் 50
ஒளிர்மகுடன் ஒளிர்தோடன்
ஒளிர்மாலையன் ஒளிராடையன்
ஒளிர்சங்கன் ஒளிர்சக்கரன்
ஒளிர்கௌத்துபன் ஒளிர்நகையன்
ஒளிர்நாமன் ஒளிர்பாதன் 60
ஒளிர்முகத்தன் ஒளிர்கழுத்தன்
ஒளிர்சிரத்தன் ஒளிர்கரத்தன்
ஒளிர்மார்பன் ஒளிர்வயிறன்
ஒளிர்தோளன் ஒளிர்காலன்
ஒளிரறிவன் ஒளிரிறைவன் 70
அறிவுடையோன் தெளிவுடையோன்
அறிவளிப்போன் தெளிவளிப்போன்
கலைவல்லன் வலுச்சொல்லன்
சொற்பலத்தன் சொற்பொருளன்
அறிவுக்கடலன் படிகமனத்தன் 80
அகல்மார்பன் அகல்மனத்தன்
அகலறிவன் அறிவிறைவன்
கலையறிஞன் கலையளிப்பன்
மறையறிஞன் அனைத்தறிவன்
அறிவருள்வன் அணைத்தருள்வன் 90
முன்தீர்மானமழிப்போன் சந்தேகமழிப்போன்
அகயிரிருளழிப்போன் அகவொளியளிப்போன்
அஞ்ஞானமழிப்போன் பிடிவாதமழிப்போன்
குழப்பங்களழிப்போன் நற்தெளிவளிப்போன்
நல்லறிவளிப்போன் நல்ஞானமளிப்போன் 100
அயக்ரீவன் அசுவக்ரீவன்
அயகர்ணன் அசுவகர்ணன்
அயவாக்சன் அசுவாக்சன்
அயவதனன் ஒளிவதனன் 108
Posted by ramesh sadasivam at 6:18 PM 0 comments
Wednesday, January 29, 2020
பரசு ராமர் 108 நாம துதி
பரசுராமன் கோடறிராமன்
பரசுராமமூர்த்தி கோடறிராமமூர்த்தி
பரசுராமசுவாமி கோடறிராமசுவாமி
பரசுராமபெருமாள் கோடறிராமபெருமாள்
பரசுராமதேவன் கோடறிராமதேவன் 10
கோபன் சினன்
கடுங்கோபன் கடுஞ்சினன்
பெருங்கோபன் பெருஞ்சினன்
நியாயக்கோபன் நியாயச்சினன்
தர்மக்கோபன் தர்மச்சினன் 20
தந்தைசொல்மதித்தோன் தாய்தலையறுத்தோன்
தந்தைவரமேற்றோன் தாயவளைமீட்டோன்
தந்தைமனம்வென்றோன் இருதாயரடைந்தோன்
தந்தைபாசத்தனயன் தாய்ப்பாசத்தனயன்
தன்னலமற்றோன் தற்பெருமையற்றோன் 30
வீரன் மாவீரன்
ஒருவீரன் பெருவீரன்
அரும்வீரன் பெரும்வீரன்
தனிவீரன் முனிவீரன்
அற்புதவீரன் அசகாயவீரன் 40
ரேணுகாபுத்ரன் ஜமதாக்னிபுத்ரன்
ரேணுகாமைந்தன் ஜமதாக்னிமைந்தன்
ரேணுகாசிங்கம் ஜமதாக்னிசிங்கம்
ரேணுகாபிள்ளை ஜமதாக்னிபிள்ளை
ரேணுகாபுதல்வன் ஜமதாக்னிபுதல்வன் 50
ஜமதாக்னிசீடன் தத்தாத்ரேயசீடன்
பீஷ்மகுரு துரோணகுரு
கர்ணகுரு கருணைகுரு
அந்தணகுரு அமர்குரு
யுத்தகுரு வீரகுரு 60
கர்த்தவீரியக்காலன் சத்ரியக்குலகாலன்
பெரும்படைக்காலன் சத்ரியவம்சக்காலன்
தனித்தமர்புரிவோன் தனியனாய்வெல்வோன்
தலைகள்பலதுணித்தோன் தலைமுறைகளழித்தோன்
நீரடிநிலமெடுத்தோன் கேரளமமைத்தோன் 70
இருகரத்தன் திறக்கரத்தன்
வலுக்கரத்தன் பலக்கரத்தன்
வலக்கைதிறத்தன் இடக்கைதிறத்தன்
கோடறிக்கரத்தன் வில்லம்புக்கரத்தன்
வாற்கரத்தன் போர்க்கரத்தன் 80
தாய்முன்ராமன் தந்தைமுன்ராமன்
குருமுன்ராமன் வீரத்தால்ராமன்
பலத்தால்ராமன் திறத்தால்ராமன்
நியாயத்தால்ராமன் தர்மத்தால்ராமன்
ஆற்றலால்ராமன் அவதாரராமன் 90
கோபாவதாரன் நியாயாவதாரன்
விஷ்ணாவதாரன் தர்மாவதாரன்
வீராவதாரன் தீராவதாரன்
அந்தணநேசன் சத்ரியபகைவன்
படைகள்முன்துணிந்தோன் சீராமர்முன்பணிந்தோன் 100
ராமநன்மைகண்டோன் ராமபண்புகண்டோன்
ராமவீரம்கண்டோன் ராமயீரம்கண்டோன்
ராமமுடிகண்டோன் ராமபாதம்கண்டோன்
ராமராற்றல்கண்டோன் கோபமதுவிட்டோன் 108
Posted by ramesh sadasivam at 9:06 AM 0 comments
Tuesday, January 28, 2020
விக்ரம மூர்த்தி 108 நாம துதி
வளர்ந்தோன் வானளாவவளர்ந்தோன்
அளந்தோன் வானத்தையளந்தோன்
நீண்டோன் வான்தொடநீண்டோன்
வளர்த்தோன் தன்னுருவளர்த்தோன்
நின்றோன் வானளாவநின்றோன் 10
விண்ணளந்தோன் மண்ணளந்தோன்
விண்கவர்ந்தோன் மண்கவர்ந்தோன்
விண்ணளந்தபாதன் மண்ணளந்தபாதன்
விண்ணளந்தகாலன் மண்ணளந்தகாலன்
விண்கவர்ந்தமாயன் மண்கவர்ந்தமாயன் 20
பேருருவன் பேருடலன்
பெருவுருவன் பெருவுடலன்
மாவுருவன் மாவுடலன்
மகாவுருவன் மகாவுடலன்
மாமாயன் மகாமாயன் 30
விண்தொட்டபாதன் மண்தொட்டபாதன்
விண்ணெட்டியபாதன் விண்முட்டியபாதன்
விண்தொட்டகாலன் மண்தொட்டகாலன்
விண்ணெட்டியகாலன் மண்ணெட்டியகாலன்
வானெட்டியபாதன் வானெட்டியகாலன் 40
பூவுலகப்பாதன் மூவுலகப்பாதன்
சத்யலோகப்பாதன் சப்தலோகப்பாதன்
பூவுலகக்காலன் மூவுலகக்காலன்
சத்யலோகக்காலன் சப்தலோகக்காலன்
சர்வலோகப்பாதன் சர்வலோகக்காலன் 50
சத்யலோகம்சென்றபாதன் சதுர்முகன்கண்டபாதன்
சதுர்முகன்துதித்தபாதன் சதுர்முகன்தொழுதபாதன்
சதுர்முகன்நினைத்தபாதன் சதுர்முகன்நனைத்தபாதன்
நான்முகன்துதித்தபாதன் நான்முகன்தொழுதபாதன்
நான்முகன்நினைத்தபாதன் நான்முகன்நனைத்தபாதன் 60
விக்ரமவிஷ்ணு விஷ்ணுவிக்ரமன்
விக்ரமநாரணன் நாரணவிக்ரமன்
விக்ரமகேசவன் கேசவவிக்ரமன்
விக்ரமமாலவன் மாலவவிக்ரமன்
விக்ரமவாமனன் வாமனவிக்ரமன் 70
மலர்க்கண்விக்ரமன் மலர்ப்பாதவிக்ரமன்
மலர்நாபவிக்ரமன் மலர்முகவிக்ரமன்
பத்மவிழிவிக்ரமன் பத்மபாதவிக்ரமன்
பத்மநாபவிக்ரமன் பத்மமுகவிக்ரமன்
பூங்கண்விக்ரமன் பூம்பாதவிக்ரமன் 80
விக்ரமமாலன் விக்ரமமாயன்
விக்ரமகாலன் விக்ரமகாயன்
விக்ரமபாதன் விக்ரமஅடியன்
விக்ரமதேகன் விக்ரமவுடலன்
பெருவிக்ரமன் திருவிக்ரமன் 90
சதுர்க்கரவிக்ரமன் நாற்கரவிக்ரமன்
சங்குக்கரவிக்ரமன் சக்கரக்கரவிக்ரமன்
சதுர்க்கைவிக்ரமன் நாற்கைவிக்ரமன்
சங்குக்கைவிக்ரமன் சக்கரக்கைவிக்ரமன்
பாஞ்சன்யக்கையன் சுதர்சனக்கையன் 100
வனமாலைவிக்ரமன் மலர்மாலைவிக்ரமன்
கௌத்துபவிக்ரமன் மணிமார்பவிக்ரமன்
நகையிதழ்விக்ரமன் நகைமன்னவிக்ரமன்
திருநாமவிக்ரமன் பொன்மகுடவிக்ரமன் 108
Posted by ramesh sadasivam at 1:38 PM 0 comments
Monday, December 9, 2019
வாமனர் 108 நாம துதி
குறளன் குள்ளன்
குட்டன் குறுகன் சிறுவன் பெறுவன்
சின்னன் சிறியன்
சின்னவன் சிறியவன் 10
குறள்பெருமாள் குள்ளப்பெருமாள்
குட்டப்பெருமாள் குறுகப்பெருமாள்
சிறும்பெருமாள் பெறும்பெருமாள்
சின்னப்பெருமாள் சிறியபெருமாள்
சின்னவப்பெருமாள் சிறியவப்பெருமாள் 20
குறள்விட்ணு குள்ளவிட்ணு
குட்டவிட்ணு குறுகவிட்ணு
சிறும்விட்ணு பெறும்விட்ணு
சின்னவிட்ணு சிறியவிட்ணு
சின்னவவ்விட்ணு சிறியவவ்விட்ணு 30
குறளரி குள்ளவரி
குட்டயரி குறுகயரி
சிறும்மரி பெறும்மரி
சின்னயரி சிறியயரி
சின்னவவ்வரி சிறியவவ்வரி 40
குறளநாரணன் குள்ளநாரணன்
குட்டநாரணன் குறுகுநாரணன்
சிறும்நாரணன் பெறும்நாரணன்
சின்னநாரணன் சிறியநாரணன்
சின்னயந்நாரணன் சிறியந்நாரணன் 50
குறளமால் குள்ளமால்
குட்டமால் குறுகமால்
சிறும்மால் பெறும்மால்
சின்னமால் சிறியமால்
சின்னவம்மால் சிறியயம்மால் 60
காசியபமைந்தன் அதிதிமைந்தன்
காசியபபிள்ளை அதிதிபிள்ளை
காசியபுதல்வன் அதிதிபுதல்வன்
காசியபசேயன் அதிதிசேயன்
காசியபபாலன் அதிதிபாலன் 70
சூரியனிடமேற்றோன் காயத்ரியேற்றோன்
குருவிடமேற்றோன் பூணூலேற்றோன்
காசியபரிடமேற்றொன் அரைஞாணேற்றோன்
அதிதியிடமேற்றோன் கோவணமேற்றோன்
பூமியிடமேற்றோன் மான்தோலேற்றோன் 80
மதியிடமேற்றோன் தண்டத்தையேற்றோன்
பிரம்மனிடமேற்றோன் கமண்டலமேற்றோன்
குபேரனிடமேற்றோன் திருவோடேற்றோன்
சக்தியிடமேற்றோன் முதல்பிச்சையேற்றோன்
வானிடமேற்றோன் சிறுகுடையேற்றோன் 90
பலியிடம்சென்றோன் பலிமுன்நின்றோன்
மூவடிகேட்டோன் மூவுலகளந்தோன்
பலியிடமிரந்தோன் பலியிடம்கரந்தோன்
வானளாவநின்றோன் வானவர்க்காய்வென்றோன்
பலிமண்கவர்ந்தோன் பலிமனங்கவர்ந்தோன் 100
வாமனன் விக்ரமன்
திருவாமனன் திருவிக்ரமன்
வாமனமூர்த்தி விக்ரமமூர்த்தி
வாமனப்பெருமாள் விக்ரமப்பெருமாள் 108
Posted by ramesh sadasivam at 6:19 PM 0 comments
Saturday, November 23, 2019
வராக மூர்த்தி 108 நாம துதி
வராகன் பூவராகன்
வராகமூர்த்தி பூவராகமூர்த்தி
வராகசுவாமி பூவராகசுவாமி
வராகப்பெருமாள் பூவராகப்பெருமாள்
வராகதேவன் பூவராகதேவன் 10
பன்றிமுகன் பன்றிவதனன்
பன்றிமுகமூர்த்தி பன்றிவதனமூர்த்தி
பன்றிமுகசுவாமி பன்றிவதனசுவாமி
பன்றிமுகபெருமாள் பன்றிவதனபெருமாள்
பன்றிமுகதேவன் பன்றிவதனபெருமாள் 20
பெருவராகன் திருவராகன்
பெரும்பன்றியன் திருப்பன்றியன்
கருவராகன் கரும்பன்றியன்
நீலவராகன் கருநீலவராகன்
நீலப்பன்றியன் கருநீலப்பன்றியன் 30
வராகமூக்கன் பன்றிமூக்கன்
கொம்புடைமூக்கன் உலகுடைமூக்கன்
மண்ணெடுத்தமூக்கன் நிலமெடுத்தமூக்கன்
உலகெடுத்தமூக்கன் பூவெடுத்தமூக்கன்
அழகியமூக்கன் அற்புதமூக்கன் 40
கொம்பன் இருக்கொம்பன்
வன்கொம்பன் வெண்கொம்பன்
வலுக்கொம்பன் பலக்கொம்பன்
நலக்கொம்பன் சலக்கொம்பன்
அழகுக்கொம்பன் அற்புதகொம்பன் 50
தந்தன் இருதந்தன்
வன்தந்தன் வெண்தந்தன்
வலுத்தந்தன் பலத்தந்தன்
நலத்தந்தன் சலத்தந்தன்
அழகுத்தந்தன் அற்புதத்தந்தன் 60
நீர்புகுவராகன் நிலமெடுவராகன்
நீர்மீள்வராகன் நிலம்மீள்வராகன்
நீர்நனைத்ததேகன் நிலம்கதைத்தகாதன்
நீரிலுறையான்மன் நீரிலுறையாத்மன்
நீரான்மன் நீராத்மன் 70
பூதேவிகாத்தோன் பூதேவியணைத்தோன்
பூதேவிமீட்டோன் பூதேவிமணந்தோன்
பூதேவிநேசன் பூதேவிபாசன்
சீதேவிநேசன் சீதேவிபாசன்
அகிலவல்லிநேசன் அகிலவல்லிபாசன் 80
இரண்யாட்சவதையன் நல்ஞானக்கதையன்
பூமியிடம்கதைத்தோன் அரக்கனைசிதைத்தோன்
அரக்கனையடித்தோன் அரக்கனைவுதைத்தோன்
அரக்கனைமிதித்தோன் அரக்கனைதுவைத்தோன்
அரக்கனைக்கொன்றோன் அரக்கனையழித்தோன் 90
சதுர்க்கரவராகன் மலர்க்கரவராகன்
சங்குக்கரவராகன் சக்கரக்கரவராகன்
கதைக்கரவராகன் கட்கக்கரவராகன்
அபயக்கரவராகன் அடிசுட்டும்வராகன்
வெண்சங்குவராகன் சுடராழிவராகன் 100
ஆதிவராகன் திருமலைவராகன்
கல்யாணவராகன் திருவிடந்தைவராகன்
பிரளயவராகன் கள்ளயள்ளிவராகன்
யக்ஞவராகன் திருமுட்ணவராகன் 108
Posted by ramesh sadasivam at 1:09 PM 0 comments
Monday, November 18, 2019
கூர்மமூர்த்தி 108 நாம துதி
கூர்மன் ஆமையன்
கூர்மமூர்த்தி ஆமைமூர்த்தி
கூர்மபெருமாள் ஆமைபெருமாள்
கூர்மாவதாரன் ஆமையவதாரன்
கூர்மதேவன் ஆமைதேவன் 10
கூர்மவிஷ்ணு விஷ்ணுகூர்மன்
கூர்மவரி அரிகூர்மன்
கூர்மநாரணன் நாரணக்கூர்மன்
கூர்மமால் மாலக்கூர்மன்
கூர்மமாயன் மாயக்கூர்மன் 20
விஷ்ணாமையன் அரியாமையன்
நாரணாமையன் மாயாமையன்
கேசவாமையன் மாதவாமையன்
பாலாமையன் மாலாமையன்
நல்லாமையன் ஞானாமையன் 30
மலைசுமந்தமுதுகன் கிரிசுமந்தமுதுகன்
மலைதாங்கியமுதுகன் கிரிதாங்கியமுதுகன்
ஓடுடையமுதுகன் முதுகோடுடுடையோன்
வலுவுடைமுதுகன் வலுவுடையோடன்
பலமுடைமுதுகன் பலமுடையோடன் 40
பாற்கடல்கூர்மன் பாற்கடலாமையன்
கடற்கடைக்கூர்மன் கடற்கடையாமையன்
கடலடிக்கூர்மன் கடலடியாமையன்
மலைக்கடிக்கூர்மன் மலைக்கடியாமையன்
கிரிக்கடிக்கூர்மன் கிரிக்கடியாமையன் 50
அமிர்தக்காரணன் ஆலகாலகாரணன்
ஐராவதக்காரணன் உச்சசிரவக்காரணன்
காமதேனுகாரணன் கற்பகக்காரணன்
சந்திரக்காரணன் பாரிஜாதக்காரணன்
கௌத்துபக்காரணன் திருமகள்காரணன் 60
அமிர்தக்காரியன் ஆலகாலகாரியன்
ஐராவதக்காரியன் உச்சசிரவக்காரியன்
காமதேனுக்காரியன் கற்பகக்காரியன்
சந்திரக்காரியன் பாரிஜாதக்காரியன்
கௌத்துபக்காரியன் திருமகள்காரியன் 70
அமிர்தமளித்தோன் ஆலகாலமளித்தோன்
ஐராவதமளித்தோன் உச்சசிரவமளித்தோன்
காமதேனுவளித்தோன் கற்பகமளித்தோன்
சந்திரனளித்தோன் பாரிஜாதமளித்தோன்
கௌத்துபமணிந்தோன் திருமகள்மணந்தோன் 80
உதவும்மனக்கூர்மன் உழைக்கும்குணகூர்மன்
உதவும்மனவாமையன் உழைக்குணவாமையன்
நாமநெற்றிக்கூர்மன் செயல்வெற்றிக்கூர்மன்
நாமநெற்றியாமையன் செயல்வெற்றியாமையன்
கர்மயோகக்கூர்மன் கர்மயோகவாமையன் 90
தேவர்த்தொழுங்கூர்மன் சுரர்த்தொழுங்கூர்மன்
அமரர்த்தொழுங்கூர்மன் வானவர்த்தொழுங்கூர்மன்
விண்ணவர்தொழுங்கூர்மன் மண்ணவர்த்தொழுங்கூர்மன்
இந்திரந்தொழுங்கூர்மன் சந்திரந்தொழுங்கூர்மன்
பகலவர்த்தொழுங்கூர்மன் அலைமகள்தொழுங்கூர்மன் 100
நல்லக்கூர்மன் ஞானக்கூர்மன்
அன்புக்கூர்மன் அதிபலகூர்மன்
கூர்மசுரன் கூர்மநற்சுரன்
கௌத்துபக்கூர்மன் பொன்மகுடக்கூர்மன் 108
Posted by ramesh sadasivam at 8:20 PM 0 comments